Cristiano Ronaldo: ஆசிய கிளப் அணிக்காக ரொனால்டோ அடித்த கோல்களின் எண்ணிக்கை?
Jun 01, 2023, 03:32 PM IST
Saudi Pro Leauge: இந்த சீசனில் மொத்தம் 16 ஆட்டங்களில் விளையாடிய அவர் 14 கோல்களைப் பதிவு செய்தார்.
சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ இடம்பிடித்திருந்த அணி இரண்டாவது இடம் பிடித்தது. முதல் முறையாக ஆசிய கிளப் அணிக்காக அவர் விளையாடியபோதிலும் அவர் இடம்பிடித்திருந்த அணி ஜெயிக்கவில்லை.
அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் காயத்துடன் நாடு திரும்புகிறார்.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து கிளப் அணியில் சேர வாய்ப்புகள் வந்தும் அதை ரொனால்டோ நிராகரித்ததுவிட்டு சவுதி நாட்டைச் சேர்ந்த கிளப் அணியில் இடம்பிடித்திருந்தார் ரொனால்டோ.
மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் ஜுவென்டஸ் ஆகிய முன்னணி கிளப் அணிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவரான ரொனால்டோ, ஆசிய நாட்டைச் சேர்ந்த கிளப் அணியில் சேர்ந்திருந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே அமைந்தது.
கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தில் போர்ச்சுகல் அணி காலிறுதியில் மொராக்கோ அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத ரொனால்டோ மைதானத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார்.
அதைத் தொட்ரந்து தான் சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல்-நசர் அணியில் சேர்ந்தார்.
இந்த போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல் இத்திஹாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறையாக ஆசிய நாட்டைச் சேர்ந்த கால்பந்து கிளப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடியபோதிலும் இந்த சீசனில் அவர் இடம்பிடித்திருந்த அல் நசர் அணி 2வது இடம் பிடித்தது. பெரிய அளவில் ரொனால்டோ கோல் எதுவும் பதிவு செய்யவில்லை.
மொத்தம் 30 ஆட்டங்கள் நடந்தன. இதில் 22 ஆட்டங்களில் வென்று அல்-இத்திஹாத் 72 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
இந்த அணி 2 ஆட்டங்களில் மட்டுமே தோல்வியைச் சந்தித்துள்ளது. 6 ஆட்டங்களில் டிரா செய்துள்ளது. 2023 சவுதி ப்ரோ லீக் போட்டியில் மொத்தம் 60 கோல்களைப் பதிவு செய்தது அல்-இத்திஹாத்.
இதேபோல், ரொனால்டோ இடம்பிடித்த அல்-நசர் அணி, மொத்தம் 30 ஆட்டங்களில் விளையாடிய 20 இல் ஜெயித்தது. 3 இல் மட்டுமே தோற்றது. 7 ஆட்டங்களில் டிரா செய்தது. மொத்தம் 63 கோல்களை பதிவு செய்துள்ளது.
67 புள்ளிகளைப் பெற்ற இரண்டாவது இடத்தில் உள்ளது. அல்-ஹிலால் அணி 17 வெற்றிகளுடன் 59 புள்ளிகளைப் பெற்று 3வது இடத்தைப் பிடித்தது.
இங்கிலிஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ஒப்பந்தம் முடிந்ததும் விடுவிக்கப்பட்ட ரொனால்டோ, 16 அணிகள் மோதும் சவுதி அரேபியன் லீக்கில் பங்கேற்றார்.
நேற்றைய கடைசி ஆட்டத்தில் அல்-ஃபடேவை 3-0 என்ற கோல் கணக்கில் அல்-நசர் வீழ்த்தியது. ஆனால், அந்த ஆட்டத்தில் ரொனால்டோ விளையாடவில்லை. காயம் காரணமாக அவர் பெஞ்சில் அமர்ந்திருந்தார். இந்த சீசனில் மொத்தம் 16 ஆட்டங்களில் விளையாடிய அவர் 14 கோல்களைப் பதிவு செய்தார்.
டாபிக்ஸ்