தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Manu Bhaker: 20 ஆண்டுக்கு பின் சாதனை நிகழ்த்திய மனு பாக்கர்..! 10மீ பெண்கள் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி

Manu Bhaker: 20 ஆண்டுக்கு பின் சாதனை நிகழ்த்திய மனு பாக்கர்..! 10மீ பெண்கள் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி

Jul 28, 2024, 08:17 PM IST

google News
22 வயதாகும் இந்திய இளம் வீராங்கனை மனு பேக்கர் 580 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அத்துடன் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற இருக்கும் தங்கபதக்கத்துகான சுற்றில் தகுதி பெற்றுள்ளார். இதன் தனிப்போட்டியில் நேரடியாக தகுதி பெறும் வீராங்கனை மூலம் 20 ஆண்டுக்கு பின் சாதனை நிகழ்த்தியுள்ளார். (AP)
22 வயதாகும் இந்திய இளம் வீராங்கனை மனு பேக்கர் 580 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அத்துடன் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற இருக்கும் தங்கபதக்கத்துகான சுற்றில் தகுதி பெற்றுள்ளார். இதன் தனிப்போட்டியில் நேரடியாக தகுதி பெறும் வீராங்கனை மூலம் 20 ஆண்டுக்கு பின் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

22 வயதாகும் இந்திய இளம் வீராங்கனை மனு பேக்கர் 580 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அத்துடன் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற இருக்கும் தங்கபதக்கத்துகான சுற்றில் தகுதி பெற்றுள்ளார். இதன் தனிப்போட்டியில் நேரடியாக தகுதி பெறும் வீராங்கனை மூலம் 20 ஆண்டுக்கு பின் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் 10 மீட்டர் பெண்கள் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் நாளே இந்தியாவுக்கு பாஸிடிவ் தொடக்கத்தை அளித்துள்ளார்.

முன்னதாக, துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள், வீராங்கனை பல்வேறு பிரிவுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும் அடுத்த சுற்றுக்கான முன்னேறத்தை பெறாமல் வெளியேறினார். இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஒட்டு மொத்தமாக போக்கும் விதமாக பாக்கர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னேறியுள்ளார்.

22 வயதாகும் துப்பாக்கி சுடும் வீராங்கனையான மனு பாக்கர், 580 என்ற தகுதி புள்ளிகளை பெற்று, மூன்றாம் இடத்தைப் பிடித்ததோடு இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார்.

ஹங்கேரியின் வெரோனிகா மேஜர் 582 மதிப்பெண்களுடன் தகுதிச் சுற்றில் முதல் இடத்தை பிடித்தார்.அதே சமயம் ஏர் பிஸ்டன் போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான ரிதம் சங்வான் 573 மதிப்பெண்களுடன் 15வது இடத்தைப் பிடித்தார்.

மனு பாக்கர் பெற்ற புள்ளிகள்

மனு மொத்தம் ஆறு தொடர்களில் முறையே 97, 97, 98, 96, 96 மற்றும் 96 புள்ளிகள் எடுத்தார். மொத்தம் 60 ஷாட்களில் 27 ஷாட்கள் உள்ளே இழுக்கப்பட்டன. ஒரே ஒரு ஷாட் எட்டு புள்ளியாக அமைந்தது. 43வது ஷாட்டில் இது நிகழ்ந்தது. அடுத்த ஷாட்டில் கம்பேக் கொடுத்து 10 புள்ளிகள் எடுத்தார் மனு பாக்கர்.

மனு பாக்கர் கம்பேக்

கடந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பெற்ற ஏமாற்றம், காயங்களுக்கு ஆறுதலாக மனு பாக்கருக்கு பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டியின் தகுதி அமைந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றின் போது மனுவின் கைத்துப்பாக்கி பழுதடைந்தது. இதனால் ஏற்பட்ட கூடுதல் அழுத்தம் காரணமாக கனவு கலைந்து தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறினார்.

20 ஆண்டுக்கு பின் சாதனை

கடந்த 20 ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் இறுதி போட்டிக்கு நேரடியாக தனிப்போட்டியில் தகுதி பெறும் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் மனு பாக்கர். இதற்கு முன் 2004ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனையான சுமா ஷிரூர் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார் . இதன் பின்னர் தற்போது மனு பாக்கர் தனிநபர் துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் நேரடியாக நுழைந்திருப்பது சாதனையாக அமைந்துள்ளது.

10 மீட்டர் ஏர் ரைபிள் சுற்றில் வெளியேற்றம்

10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதிச் சுற்றில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் வெளியேறினர். ரமிதா மற்றும் அர்ஜுன் பாபுடா 628.7 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தனர், இளவேனில் வளரிவன் மற்றும் சந்தீப் சிங் 626.3 புள்ளிகளுடன் 12வது இடத்தைப் பிடித்தனர்.

ரமிதா மற்றும் அர்ஹுன் பாபுதா ஜோடி மூன்றாவது இடத்தை நெருங்கி வந்தபோதிலும், மூன்று ஷாட்கள் மீதமிருந்த நிலையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. ஆனால் பதக்கச் சுற்று கட்-ஆஃப்பில் 1.0 புள்ளிகள் குறைவாக பெற்றது.

பாபுதா இரண்டாவது ரிலேயில் ஒரு நல்ல தொடக்கத்தை தந்தார். 10.5, 10.6, 10.5, 10.9 என்ற வரிசையைப் பெற்றிருந்தார், அதே நேரத்தில் ரமிதா இரண்டாவது சீரிஸில் 10.2, 10.7, 10.3, 10.1 ஆகியவற்றை பெற்றார். இவர்களின் முயற்சியால் இந்திய அணியை முதல் 8 இடங்களுக்குள் சென்றது.

ஆனால், வெண்கலப் பதக்கச் சுற்றுக்குள் நுழைவதற்கு, அவர்கள் இறுதியில் அடைந்ததை விட அதிகமாகச் செய்ய வேண்டியிருந்தது. சீனா (முதல்), கொரியா (இரண்டாவது), கஜகஸ்தான் (மூன்றாவது) ஆகிய நாடுகளைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் தகுதிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தினர். பதக்கப் போட்டிகளில் நுழைய முதல் நான்கு இடங்களுக்குள் வர வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி