தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Mixed Team Championships: ஜப்பானுக்கு எதிராக கடுமையான போராட்டம்.. காலிறுதியில் வெளியேறிய இந்தியா

Asia Mixed Team Championships: ஜப்பானுக்கு எதிராக கடுமையான போராட்டம்.. காலிறுதியில் வெளியேறிய இந்தியா

Updated Feb 14, 2025 06:53 PM IST

google News
முதல் ஆட்டத்தில் உலகின் 12வது இடத்தில் உள்ள ஹிரோகி மிடோரிகாவா மற்றும் நட்சு சைட்டோ ஜோடியை எதிர்கொண்ட துருவ் மற்றும் தனிஷா ஜோடி தோல்வி அடைந்த போதிலும், இரண்டாவது ஆட்டத்தில் கம்பேக் கொடுத்தது. அந்த வெற்றியை தக்க வைக்க கடுமையாக போராடிய போதிலும் அது நடக்காமல் போனது. (PTI)
முதல் ஆட்டத்தில் உலகின் 12வது இடத்தில் உள்ள ஹிரோகி மிடோரிகாவா மற்றும் நட்சு சைட்டோ ஜோடியை எதிர்கொண்ட துருவ் மற்றும் தனிஷா ஜோடி தோல்வி அடைந்த போதிலும், இரண்டாவது ஆட்டத்தில் கம்பேக் கொடுத்தது. அந்த வெற்றியை தக்க வைக்க கடுமையாக போராடிய போதிலும் அது நடக்காமல் போனது.

முதல் ஆட்டத்தில் உலகின் 12வது இடத்தில் உள்ள ஹிரோகி மிடோரிகாவா மற்றும் நட்சு சைட்டோ ஜோடியை எதிர்கொண்ட துருவ் மற்றும் தனிஷா ஜோடி தோல்வி அடைந்த போதிலும், இரண்டாவது ஆட்டத்தில் கம்பேக் கொடுத்தது. அந்த வெற்றியை தக்க வைக்க கடுமையாக போராடிய போதிலும் அது நடக்காமல் போனது.

Qingdao [China], February 14 (ANI): பேட்மிண்டன் ஆசியா கலவை அணி சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் உள்ள கிங்டாவோவில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் கலவை இரட்டையர் ஜோடி துருவ் மற்றும் தனிஷா மற்றும் ஒற்றையர் பிரிவு வீராங்கனையான மாளவிகா பன்சோத் ஆகியோர் இணைந்து ஒரு அணியாக களமிறங்கினார்கள். இந்த தொடரில் தங்களை விட தரவரிசையில் உயர்ந்த இடத்தில் இருந்து ஜோடிகளுக்கு எதிராக முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்தும் விதமாக விளையாடினர். இருந்த போதிலும் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஜப்பான் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.

61 நிமிடம் நீடித்த மோதல்

முதல் ஆட்டத்தில் உலகின் 12வது இடத்தில் உள்ள ஹிரோகி மிடோரிகாவா மற்றும் நட்சு சைட்டோ ஜோடியை எதிர்கொண்ட இந்தியாவின் துருவ் மற்றும் தனிஷா ஜோடி, முதல் சுற்றில் தோற்றாலும் இரண்டாவது சுற்றில் அதிரடியான சண்டையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. அனுபவம் வாய்ந்த ஜப்பானிய ஜோடிகளுக்கு எதிராக 61 நிமிடம் வரை நீடித்த இந்த போட்டியில் 21-13, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வியை தழுவியது.

இந்த போட்டிக்கு பின்னர் உலகின் 8 ஆம் நிலை வீராங்கனையான டொமோகா மியாசாகியை தடுத்து நிறுத்தும் விதமாக களமிறங்கினார் மாளவிகா. இதில் மாளவிகாவின் முயற்சிகள் போதுமானதாக இல்லாமல் போனது. ஜப்பானிய நட்சத்திர ஷட்லர் டோமோகாவுக்கு எதிராக 21-12, 21-19 என்ற நேர் செட்களில் கணக்கில் தோல்வியடைந்தார்.

பிரணாய் ஏமாற்றம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற நட்சத்திர வீரரான எச்.எஸ். பிரணாய் இந்தியாவை முன்னேற்றி செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. 32 வயதான அவர், மூன்றாவது மற்றும் இந்தியாவின் தக்க வைப்பை தீர்மானிக்கும் ஆட்டத்தில் களமிறங்கினார். ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவுக்கு எதிரான ஆண்கள் ஒற்றையர் போட்டியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்பில் போராடினார். இருப்பினும் அவராலும் இந்தியாவின் இருப்பை தக்க வைக்க முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் 14-21, 21-15, 12-21 என்ற செட் கணக்கில் பிரணாய் தோல்வியை தழுவினார்'

இந்தியா வீரர்களின் ஸ்கோர் விவரம்

இந்தியா 0-3 என ஜப்பானிடம் தோல்வியடைந்துள்ளது. முதல் போட்டியில் துருவ் கபிலா/தனிஷா க்ராஸ்டோ 13-21, 21-17, 13-21 என்ற கணக்கில் ஹிரோகி மிடோரிகாவா/நட்சு சைட்டோவிடம் தோல்வி;

இரண்டாவது போட்டியில் மாளவிகா பன்சோட், டோமோகா மியாசாகியிடம் 12-21, 19-21 என்ற கணக்கில் தோல்வி.

மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் எச்.எஸ் பிரணாய் 14-21, 21-15, 12-21 என்ற கணக்கில் நினிஷிமோவிடம் தோல்வி.

பேட்மிண்டன் ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப்

பேட்மிண்டன் ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் என்பது ஆசியாவின் சிறந்த தேசிய பேட்மிண்டன் கலப்பு அணிக்கு சாம்பியன்ஷிப் அளிக்கும் விதமாக பேட்மிண்டன் ஆசியாவால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தொடராக உள்ளது. ஆசிய கூட்டமைப்பு பேட்மிண்டன் ஆசிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சாம்பியன்ஷிப்பை நடத்திய ஒரு வருடம் கழித்து, கடந்த 2017 முதல் கலப்பு அணிகளுக்கான ஒரு தனித்த நிகழ்வாக இது தொடங்கியது. இதுவரை இந்த தொடரை சீனா 2 முறை வென்று அதிக வெற்றிகளை பெற்ற அணியாக திகழ்கிறது. இதில் கடந்த 2023 தொடரில் இந்தியா வெண்கலம் வென்றது.

 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.