தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnca: 'கிளம்பி போ..! போகமாட்டேன்' விக்கெட்டுக்காக நீயா நானா போட்டியிட்ட தமிழக வீரரும், அம்பயரும்

TNCA: 'கிளம்பி போ..! போகமாட்டேன்' விக்கெட்டுக்காக நீயா நானா போட்டியிட்ட தமிழக வீரரும், அம்பயரும்

Aug 10, 2023, 04:59 PM IST

google News
அம்பயர் அவுட் கொடுத்தும் களத்தை விட்டு வெளியேறாமல் அடம்பிடித்துள்ளார் தமிழ்நாடு வீரர் பாபா அப்ரஜித். இவரது வாக்குவாதத்தால் போட்டியானது 5 நிமிடங்கள் வரை தடைபட்டது.
அம்பயர் அவுட் கொடுத்தும் களத்தை விட்டு வெளியேறாமல் அடம்பிடித்துள்ளார் தமிழ்நாடு வீரர் பாபா அப்ரஜித். இவரது வாக்குவாதத்தால் போட்டியானது 5 நிமிடங்கள் வரை தடைபட்டது.

அம்பயர் அவுட் கொடுத்தும் களத்தை விட்டு வெளியேறாமல் அடம்பிடித்துள்ளார் தமிழ்நாடு வீரர் பாபா அப்ரஜித். இவரது வாக்குவாதத்தால் போட்டியானது 5 நிமிடங்கள் வரை தடைபட்டது.

கிரிக்கெட் களத்தில் வைத்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அதை வெளிக்காட்டும் வீரர்களை பார்த்துள்ளோம். சமீபத்தில் நடைபெற்று முடிந்த வங்கதேசம் மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், அம்பயரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை விமர்சித்து நடந்துகொண்ட விதம் இந்திய கிரிக்கெட்டில் வரலாற்றில் மோசமான நிகழ்வாக அமைந்தது.

அம்பயரின் முடிவு தவறானது என்ற வாதத்தை முன் வைத்து ஹர்மன்ப்ரீத் களோபரம் செய்தார். அதேபோன்றதொரு சம்பவம் தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிவிஷன் 1 தொடரில் நிகழ்ந்துள்ளது. இதில் தேவையில்லாத சூழ்நிலையில் சிக்கி கொண்ட வீரர் பாபா அப்ரஜித்.

ஜாலி ரோவர்ஸ் சிசி - யங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாபா அப்ரஜித், அம்பயரின் அவுட் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து களத்தை விட்டு வெளியோறாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது. இவரது இந்த செயலால 5 நிமிடங்களுக்கு மேலாக போட்டி தடைபட்ட பின்னர் தொடங்கப்பட்டது.

பாபா அப்ரஜித் அடபிடிப்புக்கு பின்னர் அவருக்கு கொடுக்கப்பட்ட எல்பிடபிள்யூ முடிவு, பின்னர் கேட்ச் என அறிவிக்கப்பட்டது. யங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் கிளப் அணியை சேர்ந்த வீரரான அப்ரஜித் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜாலி ரோவர்ஸ் சிசி அணி கேப்டன் ஹரி நிசாந்த் வீசிய பந்தை எதிர்கொண்டார். இதில் அற்புதமாக திரும்பிய ஹரி நிசாந்த் வீசிய சுழற் பந்து, மூன்று ஸ்டம்ப்களையும் மறைத்து நின்ற அப்ரஜித் இடது காலில் பட்ட நிலையில் அம்பயர் அவுட் கொடுத்தார். இதனை ஷார்ட் லெக் திசையில் இருந்த ஜிஎஸ் ராஜுவும் கேட்ச் பிடித்தார்.

 

உடனடியாக பவுலர், பீல்டர்கள் அப்பீல் கேட்க, அம்பயர் அவுட் என்ற முடிவை வழங்கினார். ஆனால் இந்த முடிவால் அதிர்ச்சிக்குள்ளான அப்ரஜித், அம்பயரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார். ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த அம்பயர் அவரை வெளியேறுமாறு தெரிவித்தார்.

பின்னர் எதிரணி வீரர்கள், மற்றும் களத்தில் இருந்த மற்றொரு அம்பயர்களும், அப்ரஜித்தும் விவாதித்த நிலையில் இறுதியில் அவுட் என முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவால் வெறுத்துபோன அப்ரஜித் பெவிலியன் திரும்பும் வரை தனது வாக்குவாதத்தை அம்பயரிடம் தொடர்ந்து கொண்டே சென்றார்.

அப்ரஜித் விளையாடிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்திருந்தபோது களமிறங்கிய அவர், சாய் சுதர்சனுடன் இணைந்து 42 ரன்கள் சேர்த்து, அணியை சரிவிலிருந்து மீட்டார். இந்த போட்டியில் அப்ரஜித் அணி வெற்றி பெற்ற நிலையில், அதிகபட்சமாக அவரது அணியை சேர்ந்த சாய் சுதர்சன் 67 ரன்கள் எடுத்தார்.

டிஆர்எஸ் போன்ற அம்பயர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்புகள் இருந்து, சமீப காலமாக அம்பயர்களின் முடிவுக்கு வீரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது, அவர்களிடம் வாதாடும் நிகழ்வுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது கிரிக்கெட் விளையாட்டின் மீதான மதிப்பு குறைக்கும் விதமாக இருப்பதாக முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி