தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Athlete Gender Debate: இந்தியாவின் டூட்டி சந்த்,சாந்தி செளந்தரராஜன்..!பாலின சர்ச்சையில் சிக்கிய விளையாட்டு வீராங்கனைகள்

Athlete Gender Debate: இந்தியாவின் டூட்டி சந்த்,சாந்தி செளந்தரராஜன்..!பாலின சர்ச்சையில் சிக்கிய விளையாட்டு வீராங்கனைகள்

Aug 02, 2024, 06:58 PM IST

google News
பாரிஸ் ஒலிம்பிக்கில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மூக்கை உடைத்து வெளியேற்றிய அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் மீது பாலின சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இவரை போல் பாலின சர்ச்சையில் சிக்கிய விளையாட்டு வீராங்கனைகள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மூக்கை உடைத்து வெளியேற்றிய அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் மீது பாலின சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இவரை போல் பாலின சர்ச்சையில் சிக்கிய விளையாட்டு வீராங்கனைகள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மூக்கை உடைத்து வெளியேற்றிய அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் மீது பாலின சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இவரை போல் பாலின சர்ச்சையில் சிக்கிய விளையாட்டு வீராங்கனைகள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டில் 66 கிலோ எடைப்பிரிவு குத்துசண்டை போட்டியில் அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் வெளிப்படுத்திய முரட்டுத்தனமான பஞ்ச் மூலம் மூக்கு உடைந்த நிலையில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி போட்டியில் இருந்து விலகினார். 46 விநாடிகள் வரை மட்டுமே நீடித்த இந்த போட்டி இமானே கெலிஃபு மீது பாலின விவாதத்தைத் தூண்டியுள்ளது.

25 வயதாகும் இமானே கெலிஃப்பின் இந்த சர்ச்சைக்குரிய வெற்றி, பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பு உள்பட பல்வேறு விஷயங்களில் கவலை எழுப்பியுள்ளது.

இவரை போல் தைவான் நாட்டை சேர்ந்த குத்துசண்டை வீராங்கனையான லின் யு-டிங், 51 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடும் நிலையில், பாலின விவாத சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தகுதி நீக்கம்

இந்த இருவரும் பாலின சோதனையில் தோல்வி கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக பாக்சிங் சாம்பியன்ஷிப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இறுதிப்போட்டிக்கு முன்னர் இமானே கெலிஃப் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், லின் யு-டிங் வெண்கல பதக்கம் வென்ற நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவரிடமிருந்து பதக்கமும் பறிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் இவர்கள் இருவருக்கும் XY குரோமோசோம்கள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் பெண் போட்டியாளராக களமிறங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

மகளிருக்கான போட்டிகளில் பங்கேற்று, பதக்கமும் வென்று பாலின விவாத சர்ச்சை எழுந்திருப்பது இது முறையல்ல. இதற்கு முன்னர் இதே பிரச்னைகள் சந்தித்த வீராங்கனைகள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.

இதில் இந்தியாவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனைகளை டூட்டி சந்த், சாந்தி செளந்தரராஜன் ஆகியோரும் உள்ளார்கள்.

கேஸ்டர் செமன்யா

மூன்று ஒலிம்பிக் பதக்கங்கள், மூன்று உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்ற வீராங்கனையாக திகழ்ந்த தென் ஆப்பரிக்கா ஓட்டப்பந்த வீராங்கனை கேஸ்டர் செமன்யா, பெண்ணாக பிறந்த பின்னர் ஆண்கள் பாதிப்பை வெளிப்படுத்தும் பாலின நிலை அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

2009 உலக சாம்பியன்ஷிப் வெற்றியைத் தொடர்ந்து, செமன்யா பாலின சரிபார்ப்பு சோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவரது பரிசோதனை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், ஜூலை 2010இல் செமன்யா மீண்டும் களமிறங்க அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் 2018இல் இவரது செயல்பாடு மீது மீண்டும் சர்ச்சை எழுந்த நிலையில், தடகள கூட்டமைப்புகளின் சர்வதேச சங்கம் (IAAF) புதிய விதிமுறையை முன்னிறுத்தியது. அதில் அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கொண்ட ஹைபராண்ட்ரோஜெனிக் விளையாட்டு வீரர்கள் அதன் அளவை குறைப்பதற்கான மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டது.

டூட்டி சந்த்

முன்னாள் இந்திய ஸ்ப்ரிண்டர் டூட்டி சந்த் விளையாட்டு உலகை உலுக்கிய மற்றொரு ஹைபராண்ட்ரோஜெனிசம் சர்ச்சையின் மைய நபராக இருந்தார். 2014ஆம் ஆண்டில், அவர் இந்தியாவின் காமன்வெல்த் அணியிலிருந்தும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்தும் ஹைபராண்ட்ரோஜெனிசம் காரணமாக நீக்கப்பட்டார்.

விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS) தீர்ப்பை எதிர்த்து இவர் முறையிட்டதன் விளைவாக, இதன் விளைவாக தடகள கூட்டமைப்புகளின் சர்வதேச சங்கம் (IAAF) ஹைபராண்ட்ரோஜெனிசம் குறித்த தனது கொள்கையை மாற்றியது. இந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களை பெண்களாக போட்டியிடவும் அனுமதித்தது.

சாந்தி செளந்தரராஜன்

தமிழ்நாட்டை சேர்ந்த சாந்தி செளந்தரராஜன் பாலின சர்ச்சையில் சிக்கிய ஓட்டப்பந்தய வீராங்கனையாக திகழ்ந்தார். 2006ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற பிறகு, அவர் பாலின சரிபார்ப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்,

மேலும் அவர், "ஒரு பெண்ணின் பாலினப் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை" என்று முடிவுகள் வெளியாகின. இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், பதக்கமும் பறிக்கப்பட்டது.

அதேசமயம் செமன்யா, சந்த், மற்றும் சௌந்தரராஜன் அவர்களின் பாலின அடையாளம் மருத்துவ நிலைமைகள் காரணமாக கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அந்த நேரத்தில் விளையாட்டுகளில் மற்றொரு பொங்கி எழும் சர்ச்சையாக, திருநங்கைகள் விளையாட்டு வீரர்கள் எப்படி பெண்களாக போட்டியிட அனுமதிக்கப்பட்டனர் என்கிற விமர்சனங்கள் எழுந்தன.

லாரல் ஹப்பார்ட்

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நியூசிலாந்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற சாதனையை படைத்தார்.

அவரது உயிரியல் நிலை நன்மையைக் கொடுத்தது என்று பலர் வாதிட்ட போதிலும், ஹப்பார்ட் டோக்கியோவில் பதக்கம் வெல்ல தவறிவிட்டார்.

நியூசிலாந்து பளுதூக்கும் வீராங்கனை லாரல் ஹப்பார்ட் முதல் திருநங்கை ஒலிம்பியனாக தேர்வு செய்யப்பட்டார் லியா தாமஸ் அமெரிக்க நீச்சல் வீராங்கனை லியா தாமஸும் அவரது பாலின அடையாளம் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

லியா தாமஸ்

அமெரிக்கரான இவர், 25 வயதான திருநங்கை நீச்சல் வீராங்கனையாக இருந்தார். சட்ட சவாலை தோல்வியுற்ற நிலையில், அமெரிக்க ஒலிம்பிக் அணியில் இடம் பெறு முடியாமல் போனது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி