தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Games Table Tennis: ஆண்கள், மகளிர் டேபிள் டென்னிஸ் அணிகள் கலக்கல்! வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Asian Games Table Tennis: ஆண்கள், மகளிர் டேபிள் டென்னிஸ் அணிகள் கலக்கல்! வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Sep 23, 2023, 02:41 PM IST

google News
ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா ஆண்கள், மகளிர் அணிகள் வெற்றி வாகை சூடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா ஆண்கள், மகளிர் அணிகள் வெற்றி வாகை சூடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா ஆண்கள், மகளிர் அணிகள் வெற்றி வாகை சூடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஆனால் தொடக்க விழாவுக்கு முன்னரே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியா, தஜிகிஸ்தானுக்கு எதிராக அணி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா அணி சார்பில் ஹர்மீத் தேசாய், மனுஷ் ஷா, மனவ் தாக்கர் ஆகியோர் விளையாடினர்.

தஜிகிஸிதான் அணியை 3-0 என்ற என்ற கணக்கில் இந்தியா முழுமையாக வீழ்த்தியுள்ளது.

தஜிகிஸ்தான் வீரருக்கு எதிராக 11-1, 11-3, 11-5 என்ற புள்ளி கணக்கில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி விளையாடினார் இந்திய வீரர் ஹர்மீத் தேசாய். இவரைப் போல் மனுஷ் ஷா 13-11, 11-7, 11-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்திய அணியின் மற்றொரு வீரரான மனவ் தாக்கர் 11-8, 11-5, 11-8 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றியை ருசித்தார். இந்தியா இடம்பிடித்திருக்கும் குரூப் எஃப் பிரிவில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா அடுத்ததாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டியில், அடுத்த கஜகஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து மகளிருக்கான டேபிள் டென்னிஸ் விளையாட்டில் முதல்நிலை ஆட்டத்தில் இந்தியா நேபாள அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் முலம் இந்தியா அடுத்து சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி