U16 Women Chapionship: அறிமுக போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்திய 13 வயது ஜார்க்கண்ட் சிறுமி அனுஷ்கா குமாரி
Mar 02, 2024, 03:06 PM IST
U16 கால்பந்து மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கிய அறிமுக போட்டியில் 3 கோல்களை அடித்து கவனத்தை ஈர்த்துள்ளார் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனுஷ்கா குமார்.
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் யு16 மகளிர் சாம்பிஷிப் கால்பந்து போட்டிகள் நோபாள தலைநகர் காத்மண்டுவில் தொடங்கியது. இதில் முதல் போட்டியில் இந்தியா - பூட்டான் அணிகள் மோதின.
இந்த போட்டி முழுவதும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியதுடன் 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணியில் அறிமுக வீராங்கனையாக முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனுஷ்கா குமார் மூன்று கோல்களை அடித்தார். ஆட்டத்தின் 17, 27, 40 ஆகிய நிமிடங்களில் கோல்கள் அடித்தார். வெறும் 23 நிமிடங்களில் இந்தியாவுக்கு மூன்ு கோல்களை பெற்று தந்தார். அத்துடன் ஆட்டத்தின் முதல் பாதியில் அடிக்கப்பட்ட 6 கோல்களில் மூன்று கோல்கள் அனுஷ்கா குமாரியால் அடிக்கப்பட்டது
ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் இந்தியாவுக்கான 7வது கோல் அன்விதா ரகுராமன் என்பவரால் அடிக்கப்பட்டது. சிறப்பான வெற்றியுடன் இந்த தொடரை இந்தியா தொடங்கியுள்ளது.
அத்துடன் முதல் போட்டியிலேயே 3 கோல்களை அடித்து கவனம் ஈரத்திருக்கும் அனுஷ்கா குமாரிக்கு பாராட்டுகளை குவிந்து வருவதோடு, அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்திய யு19 ஆண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்றது இந்தியா. தற்போது அதே இடத்தில் யு16 மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆண்கள் அணியை போல் மகளிர் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்