தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  2023 Sports Rewind: இந்த ஆண்டு விளையாட்டுத் துறையில் நிகழ்ந்தவை-ஓர் கண்ணோட்டம்

2023 Sports Rewind: இந்த ஆண்டு விளையாட்டுத் துறையில் நிகழ்ந்தவை-ஓர் கண்ணோட்டம்

Manigandan K T HT Tamil

Dec 31, 2023, 07:15 AM IST

google News
ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை விளையாட்டுத் துறையில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க சாதனைகள், நிகழ்வுகளின் ரீவைண்ட் இங்கே.
ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை விளையாட்டுத் துறையில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க சாதனைகள், நிகழ்வுகளின் ரீவைண்ட் இங்கே.

ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை விளையாட்டுத் துறையில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க சாதனைகள், நிகழ்வுகளின் ரீவைண்ட் இங்கே.

ஜன. 08: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச்சும், மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் அரினா சபலென்காவும் வெற்றி வாகை சூடினர்.

ஜன. 15: ஜன.10ஆம் தேதி, ஜன.12 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட்டிலு் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

ஜன. 18: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு கிரிக்கெட்டில் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தினார். இரட்டை சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

ஜன. 25: மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கு பெறும் 5 அணிகளின் ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ.4,670 கோடி வருவாய் கிடைத்தது.

பிப். 1: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 ஆட்டத்தில் இளம் வீரர் சுபமன் கில்லின் அதிரடியால் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

பிப். 2: டி20 ட்ரை சீரிஸ் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

பிப்.5 : பாஸ்டன் நியூ பேலன்ஸ் இன்டோர் கிராண்ட்ப்ரீ தடகள போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர்.

பிப். 13: மகளிர் ஐபிஎல் போட்டி அறிமுக சீசனுக்கான வீராங்கனைகள் ஏலத்தில், அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ரூ.3.40 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார்.

பிப். 14: ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற தேசிய நடைப் போட்டியில் பஞ்சாபின் அக்ஷ்தீப் சிங், உத்தரப் பிரதேசத்தின் பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

பிப்.21: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா 20 ஆண்டு கால டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவர் கடைசியாக துபாய் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார்.

பிப். 22: ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து லீக் போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், ரியல் மாட்ரிட் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மார்ச் 1: இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். அத்தகைய சாதனையை படைத்த 2 வது இந்திய வீரர் ஆனார் ஜடேஜா. முதல் வீரர் கபில் தேவ்.

மார்ச் 2: இந்திய இளம் கிராண்ட்மாஸ்டரும், சென்னையைச் சேர்ந்தவருமான டி.குகேஷ், ஆசிய செஸ் கூட்டமைப்பின் 2022 சிறந்த வீரர் விருதை வென்றார்.

மார்ச் 4: இந்தியாவில் முதல் முறையாக மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் வென்றது. 54 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக அணி வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், முதல் முறையாக சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி வெளிநாட்டில் (சவுதி அரேபியா) நடந்தது.

மார்ச் 6: ஸ்பெயினில் நடந்த சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்று அசத்தியது.

மார்ச் 13: பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. அத்துடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

மார்ச் 18: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணி பெங்களூர் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நியூசி., வீரர்கள் கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோலஸ் ஆகியோர் இரட்டை சதம் விளாசி அசத்தினர்.

மார்ச் 26: டெல்லியில் நடந்த மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிகாத் ஜரீன், லவ்லினா ஆகியோர் முறையே தங்கள் எடைப்பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர்.

முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஏப்.2: ஸ்பெயினின் மாட்ரிட் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து இரண்டாம் இடம் பிடித்தார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சலீம் துரானி குஜராத்தின் ஜாம் நகரில் காலமானார். அவருக்கு வயது 88.

ஏப்.9: கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி அசத்தினார் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங். அந்த அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. குஜராத்துக்கு எதிரான ஆட்டமாக அது அமைந்தது.

மே 1- ஆசிய இளையோர் தடகளப் போட்டியில் 6 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலம் என 24 பதக்கங்களை வென்றது இந்தியா. இதன்மூலம், 2வது இடத்தைப் பிடித்தது. சீனா முதலிடம் பிடித்து.

மே 29- சிஎஸ்கே ஐபிஎல் கிரிக்கெட்டில் 5வது முறையாக சாம்பியன் ஆனது. கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் ஜடேஜா. மும்பை இந்தியன்ஸின் சாதனை சமன் செய்யப்பட்டது.

ஜூன் 1: ஆசிய ஜூனியர் ஹாக்கி கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஜூன் 10: பிரெஞ்சு ஓபனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூன் 11: இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் ஆனது.

ஜூன் 18: இந்தோனேஷியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

ஜூன் 21: இந்திய மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனது.

ஜூலை 3-தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் இந்திய வீராங்கனை மானா படேல் புதிய தேசிய சாதனையை படைத்தார்.

ஜூலை 4- இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 5- இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக தமிழர் ஆதவ் அர்ஜுனா தேர்வு ஆகினார்.

ஜூலை 11- டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் நெல்லையை வீழ்த்தி கோவை கிங்க்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டதை தட்டிச் சென்றது.

ஜூலை-14 ஆசிய தடகள போட்டியின் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் ஸ்ரீ சங்கர் வெளிப்பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

ஜூலை-18 டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் சாதனை

ஜூலை-20 வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2-வது டெஸ்ட் 500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் விராட் கோலி

ஜூலை-22 கொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் கோப்பையை வென்று தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தது.

ஆகஸ்ட் 2- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் வசப்படுத்தியது

ஆகஸ்ட்-4 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை.

ஆகஸ்ட்-27 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்தார்

செப். 1: சர்வதேச செஸ் சம்மேளனத்தின் உலகத் தரவரிசையில் இந்தியர்களில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் தமிழர் குகேஷ்

செப் 10: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெலாரஸின் அர்யனா சபலென்காவை 2-6,6-3,6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்க இளம் வீராங்கனை கோகோ கெளஃப்

செப் 11: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி யதன் மூலம் 24-வது முறையாக பட்டம் வென்றததோடு மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையும் சமன் செய்தார். இதன் மூலம் டென்னிஸ் உலகின் மன்னன் என்பதை நிரூபித்துளார் ஜோகோவிச்

அக். 5: ஆசிய கேம்ஸில் ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

அக். 11: உலகக் கோப்பையில் அதிக சதங்களை பதிவு செய்தவர் ரோகித் சர்மா. இவர் சச்சின் டெண்டுல்கரின் இந்தச் சாதனையை முறியடித்தார். ஆப்கனையும் இந்தியா வீழ்த்தியது.

நவ. 15: உலகக் கோப்பை வரலாற்றில் 50 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர், உலகக் கோப்பையின் ஒரே எடிஷனில் அதிக சிக்ஸர்கள் என்ற இரு சாதனைகளை படைத்தார் ரோகித் சர்மா. இச்சாதனையை வெஸ்ட் இண்டீஸின் கெயில் வைத்திருந்தார். தற்போது அச்சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார்.

நவ. 19: உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. இந்தியா ரன்னர் அப் ஆனது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

டிச. 14: இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

டிச. 21: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டிச. 24: மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக ஆஸி., மகளிர் அணியை இந்திய மகளிர் அணி வென்றுள்ளது வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்படுகிறது.

டிச. 26: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

டிச. 29: பாகிஸ்தானுகக்கு எதிரான 2வது டெஸ்டில் வென்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை மார்ககெட்டா வோன்ட்ரோ சோவா முதல் முறையாக ‘சாம்பியன்’ பட்டம் வென்று சாதனை படைத்தார்.

 

அடுத்த செய்தி