(1 / 6)Sukran Ketu: சுக்கிர பகவான் சிம்ம ராசியில் இருந்து விலகி ஆகஸ்ட் 25அன்று அதிகாலை 01:24 மணிக்கு, கன்னி ராசிக்குள் நுழைந்தார். மழுப்பலான கிரகமான கேது ஏற்கனவே கன்னி ராசியில் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில் கன்னி ராசியில் சுக்கிரன்-கேது சேர்க்கை உருவாகி இருக்கிறது. சுக்கிர பகவான், காதல், செல்வம், ஆடம்பரம், திறமை ஆகியவற்றின் காரணகர்த்தாவாக இருக்கிறார். கேது பகவான், சற்று சிக்கல்களைத் தரும் கிரகம். இவர் ஒரு ராசியில் 18 மாதம் சஞ்சரிப்பார்.ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும்போது, அது ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் பாதிக்கிறது. இந்நிலையில், கேது-சுக்கிரன் சேர்க்கை பொதுமக்களுக்கு மங்களகரமானதா அல்லது அமங்கலமானதா என்ற கேள்வி மக்கள் மனதில் உள்ளது.