தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஸ்மார்ட்போன் தொலைந்தோ, காணாமல் போய்விட்டதா? கவலை வேண்டாம்.. மிஸ்ஸான போனை கண்டறிய எளிய வழகள் இதோ

ஸ்மார்ட்போன் தொலைந்தோ, காணாமல் போய்விட்டதா? கவலை வேண்டாம்.. மிஸ்ஸான போனை கண்டறிய எளிய வழகள் இதோ

Published Jul 14, 2025 11:30 PM IST

உங்களது ஸ்மார்ட்போன் தொலைந்தோ அல்லது திருடப்பட்டலோ கவலை கொள்ள வேண்டாம். மிஸ்ஸான உங்கள் ஸ்மார்ட்போன் இருக்கும் இடத்தை ட்ராக் செய்ய, கண்காணிக்க மற்றும் பிளாக் செய்யவும், அதை நீக்கவும் கடைப்பிடிக்க வேண்டிய சில எளிய வழியை காணலாம்

திருடப்பட்ட மற்றும் தொலைந்த ஸ்மார்ட்போனை எவ்வாறு கண்காணிப்பது: ஸ்மார்ட்போன்கள் வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமல்லாமல் நமது தனிப்பட்ட தகவல்கள், வங்கி பரிவர்த்தனை, ஓடிபி, சமூக வலைத்தள கணக்குகள் உள்பட பல்வேறு தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் சேமித்து வைக்கப்படும் கருவியாக இருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் போன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ, அது உங்களுக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறலாம். ஏனென்றால் மிஸ்ஸான போன் தவறுதலாக பயன்படுத்தப்பட்டால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆனால் இப்போது அதற்கு கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் இந்திய அரசின் 'சஞ்சார் சாதி' போர்ட்டலின் CEIR (மத்திய உபகரண அடையாளப் பதிவு) அம்சத்தின் உதவியுடன், உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைலை எளிதாகத் கண்டறிவது, கண்காணிப்பது, பிளாக் செய்வது போன்ற விஷயங்களை செய்யலாம்
(1 / 7)

இந்த போர்ட்டலின் உதவியுடன் இதுவரை 1812 தொலைந்த தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் மொபைல் பயனாளர்களை நிம்மதி பெருமூச்சு அடைய வைத்திருக்கும் இந்த போர்ட்டலைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்
(2 / 7)
இந்த போர்ட்டலின் உதவியுடன் இதுவரை 1812 தொலைந்த தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் மொபைல் பயனாளர்களை நிம்மதி பெருமூச்சு அடைய வைத்திருக்கும் இந்த போர்ட்டலைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்(iStock)
CEIR போர்டல் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது? CEIR என்பது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் (DoT) முன்முயற்சியான மத்திய உபகரண அடையாளப் பதிவேடு (CEIR) ஆகும். தொலைந்து போன அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களை வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி கண்காணித்து தடுப்பதே இதன் முக்கிய பணியாகும். ஒவ்வொரு மொபைலுக்கும் IMEI (சர்வதேச மொபைல் உபகரண அடையாள எண்) எண் எனப்படும் தனித்துவமான அடையாளம் உள்ளது. CEIR இந்த IMEI எண்ணின் உதவியுடன் செயல்படுகிறது
(3 / 7)

திருடப்பட்ட அல்லது தொலைந்து போன தொலைபேசியை திரும்பப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம். முதிலில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் FIR பதிவு செய்ய வேண்டும். அதன் நகலை போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும். உங்கள் மொபைலின் IMEI-ஐ குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கையில் தொலைபேசி இல்லையென்றால், அதை வாங்கும்போது பெறப்பட்ட பாக்ஸ், ரசீது அல்லது உங்கள்  தொலைத்தொடர்பு வழங்குநரிடமிருந்து IMEI எண்ணை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்
(4 / 7)

FIR பதிவு செய்த பிறகு CEIR போர்ட்டல், அதாவது https://www.sancharsaathi.gov.in என்ற வலைத்தளத்துக்கு சென்று 'Citizen Centric Services' (குடிமகன் மைய சேவைகள்) என்பதை கிளிக் செய்யவும். இங்கே, ‘Block Stolen/Lost Mobile’ (தொலைந்து போன மொபைலைத் தடு) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே உங்களிடம் சில தகவல்கள் கேட்கப்படும்: மொபைல் எண், IMEI எண், FIR எண் மற்றும் அதன் நகல், மொபைல் தொலைந்த இடம் மற்றும் நேரம், செல்லுபடியாகும் ஐடி போன்றவற்றின் தகவல்களை நிரப்ப வேண்டும்
(5 / 7)

படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இதை செய்த பிறகு உங்கள் விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்க ஒரு கோரிக்கை ஐடியைப் பெறுவீர்கள்
(6 / 7)

மொபைல் திருப்பி அனுப்பப்பட்டால் என்ன செய்வது? உங்கள் மொபைல் திருப்பி அனுப்பப்பட்டால், நீங்கள் CEIR போர்ட்டலுக்குச் சென்று ‘Unblock Found Mobile’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அதை மீண்டும் செயல்படுத்தலாம். அங்கு, அதே கோரிக்கை ஐடியை உள்ளிட்டு தேவையான சில தகவல்களை வழங்குவதன் மூலம் தொலைபேசியை ரீஸ்டாரட் செய்யலாம்
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை