தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Today Tn Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு மழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த லேட்டஸ்ட் அறிவிப்பு என்ன?

Today TN Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு மழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த லேட்டஸ்ட் அறிவிப்பு என்ன?

Jul 25, 2024, 10:15 AM IST

Today TN Weather Update: ஜூலை 25 ம் தேதியான இன்று, தமிழ்நாட்டின் வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? எந்தெந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது? இதோ முழு விபரம்!

  • Today TN Weather Update: ஜூலை 25 ம் தேதியான இன்று, தமிழ்நாட்டின் வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? எந்தெந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது? இதோ முழு விபரம்!
தமிழ்நாட்டில் இன்று பரவலான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் அடிப்படையில் அறிய முடிகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
(1 / 6)

தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்புப் படி, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என கூறியுள்ளார். வால்பறை, நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்யும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார், 
(2 / 6)

காலை 8 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின் படி, அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செய்யூர்,மதுராந்தகம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. 
(3 / 6)
காலை 8 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின் படி, அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செய்யூர்,மதுராந்தகம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. (Hindustan Times)
இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பெரும்பான்மையான பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, மழையால் சிறிய பாதிப்புகளை அப்பகுதிகள் சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
(4 / 6)

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, முன்கூட்டியே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 
(5 / 6)
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, முன்கூட்டியே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. (PTI)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று நேரத்திற்கு முன் தகவல் தெரிவித்துள்ளது. 
(6 / 6)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று நேரத்திற்கு முன் தகவல் தெரிவித்துள்ளது. (Hindustan Times)
:

    பகிர்வு கட்டுரை