(5 / 6)திருப்புமுனை தந்த திரைவாழ்வு:2010ஆம் ஆண்டு, 'பந்த் பஜா பாரத்’ என்னும் பாலிவுட் காமெடி திரைப்படத்திற்கு நடந்த ஆடிஷனில் பங்கு எடுத்த, ரன்வீர் சிங் தனது வித்தியாசமான அலப்பறையான நடிப்பால் பலரை ஈர்த்து இருக்கிறார். இதைப் பார்த்த யாஷ்ராஷ் ஃபிலிம்ஸின் ஆதித்ய சோப்ராவும், இந்த காமெடி படத்துக்கு இவர் தான் ஹீரோ என டிக் அடித்திருக்கிறார். இதன்மூலம் முதல் படத்திலேயே அனுஷ்கா சர்மாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றாராம். இப்படத்தில் டெல்லிவாசியாக நடிப்பதற்காக, டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுடன் சிறிதுகாலம் தங்கியிருந்தார், நடிகர் ரன்வீர் சிங். இப்படம் சத்தமில்லாமல் வந்து பெரிய ஹிட்டானது. இப்படத்தில் நடித்தமைக்காக முதல் அறிமுக ஃபிலிம்பேர் விருதையும் வென்றார், ரன்வீர் சிங். அதன்பின் வந்த ரொமான்ஸ் காமெடியான ’லேடீஸ் வெர்ஸஸ் ரிக்கி பால்’ என்னும் படத்திலும் தன்னுடைய முதல் பட கதாநாயகியான அனுஷ்கா சர்மாவுடன் மீண்டும் நடித்தார். அதன்பின், 2013ஆம் ஆண்டு லோடேரா, பின்னர் 2013ஆம் ஆண்டிலேயே இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘கோலியான் கி ராசலீலா ராம்லீலா’படத்தில் நடித்தார். இப்படத்தில், முதன்முதலாக தன் வருங்கால வாழ்க்கைத்துணை தீபிகா படுகோனே எனத்தெரியாமல் இருந்தபோதே, இருவரும் ரீல் ஜோடியாக நடித்தனர். இப்படம் உலகளவில் 202 கோடி வசூலித்தது மட்டுமல்லாமல், ரன்வீர் சிங்குக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப்பெற்றுத்தந்தது. இந்த வெற்றி இருவரையும் தொடர்ந்து பயணிக்க வைத்தது தனிப்பட்ட வாழ்க்கையில். இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். அதேபோல், இந்த ஜோடி 2018ஆம் ஆண்டு தங்கள் இருகுடும்ப வழக்கப்படி திருமணம் செய்துகொண்டனர். தற்போது தீபிகா கர்ப்பிணியாக இருக்கிறார்.