(6 / 7)‘’சினிமாவில் பாலியல் தொல்லை அதிகமாகத்தான் ஆகியிருக்கு. அது இப்போது மோசமாகியிருக்கு.சினிமாவில் பார்ட்டி ஒரு மாதிரி தான் இருக்கும். அதை நடத்துறதே ஒரு பெரிய நடிகராகத்தான் இருக்கும். பக்கத்து மாநில நடிகர்கள் வந்தால், அந்தப் பார்ட்டிக்கு கூப்பிடுவாங்க. கிட்டத்தட்ட விருந்தோம்பல் மாதிரி. இந்தப் பார்ட்டியால் தான், நிறைய நடிகர்கள் டைவர்ஸ் பண்றாங்க.ஒவ்வொருத்தரும் டைவர்ஸ் பண்ண வேறு மாதிரி காரணங்கள் இருக்கலாம். ஜெயம் ரவி கண்ணியமான மனுஷன். அவர் ரொம்ப பொறுமைசாலி.வேட்டைக்காரன் சக்ஸஸ் பார்ட்டிக்கு நான் போயிருந்தேன். விஜய் சார் ரொம்ப நல்லவர். அவர் குடிக்கவே இல்லை. அரசியலாகப் பார்க்கும்போது, குடும்பத்தின் அரவணைப்பு விஜய்க்கு முக்கியம். நான் கேள்விப்பட்டவரைக்கும் அவர் தனியாகத் தான் இருக்கார். அவரோட கட்சிக்காரங்க தான் அவருக்கு சப்போர்ட்டா இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அரசியல் வரும்போது அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் எல்லாருடைய சப்போர்ட்டும் வேணும். அஜித் சாருக்கு அரசியல் பிடிக்கும். ஆனால், அவராக சொல்றவரை நாம சொல்லமுடியாது இல்லையா'' என்றார்.நன்றி: ஆகாயம் தமிழ்