(5 / 6)வேட்டையன் படத்தின் படக்குழு, அதில் நடித்திருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது. அதன்படி, நடிகை ரித்திகா சிங்கின் கதாபாத்திரத்தின் பெயர் ரூபா என்றும், நடிகை துஷாராவின் கதாபாத்திரத்தின் பெயர் சரண்யா என்றும், மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தின் பெயர் தாரா என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனைத்தொடர்ந்து இன்று ராணா டகுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் நட்ராஜ் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது மாமன்னன் படப்புகழ் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரத்தின் பெயர் பேட்ரிக் என்று அதிகாரப்பூர்வமாக வேட்டையன் படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. இதனால் ஃபகத் ஃபாசிலின் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.முன்னதாக, மாமன்னன் படக்குழு ஃபகத் ஃபாசிலுக்கு ரத்னவேலு என வைத்த பெயரை, பல்வேறு தமிழ்நாட்டின் சாதிய அமைப்புகளும் இஷ்டத்துக்கு தங்கள் சாதிய பின்னொட்டுகளைச் சேர்த்து, கொண்டாடித்தீர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த சர்ச்சைகளைத் தீர்க்க நினைத்த படக்குழு, ஃபகத் ஃபாசிலுக்கு, இந்தப் படத்தில் கிறிஸ்தவ மதத்தில் பெயரை வைத்துள்ளது.