நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.
(1 / 9)
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற 75-வது குடியரசு நாள் விழாவில், தேசிய கொடியினை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.
(2 / 9)
குடியரசு தினவிழாவை முன்னிட்டு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி.
(3 / 9)
தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதுகளை வழங்கி கெளரவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அரசுப் பள்ளிக்காக தனது நிலத்தை நன்கொடையாக வழங்கிய ஆயி அம்மாள், ஊடகவியலாளர் முகமது ஜூபேர் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர்.
(4 / 9)
தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையக் குழுவினரின் தமிழ்நாட்டின் பாரம்பரிய செவ்வியல் கலையான பரதநாட்டியம், கிராமியக் கலைகளான பெரிய மேளம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்.
(5 / 9)
தஞ்சாவூர் - தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மணிப்பூர் மாநில கலைக் குழுவினரின் மெய்தி மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி.
(6 / 9)
குடியரசு தின விழாவில் அரங்கேறிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி.
(7 / 9)
குடியரசு தின விழாவில் அரங்கேறிய மணிப்பூர் மாநில மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி.
(8 / 9)
பல்வேறு துறைகளின் சார்பில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு.
(9 / 9)
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் அரங்கேறிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார ஊர்தி.