தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Windows: திடீரென முடங்கிய விண்டோஸ்..ஐடி நிறுவனங்கள் முதல் விமான சேவைகள் வரை என்ன பிரச்னை?

Windows: திடீரென முடங்கிய விண்டோஸ்..ஐடி நிறுவனங்கள் முதல் விமான சேவைகள் வரை என்ன பிரச்னை?

Jul 19, 2024, 04:29 PM IST

விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கி போயுள்ளன.

  • விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கி போயுள்ளன.
உலகின் பல நாடுகளில் மின்னணு சேவை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் பிரச்னையால் பல நாடுகளில் கணிணி சார்ந்த அலுவல் பணிகள் முடங்கி உள்ளன.
(1 / 6)

விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைட்ட உள்ளிட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
(2 / 6)

குறிப்பாக, விமான துறை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன. இந்தியாவில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விண்டோஸ் செயல்படாததால் விமானங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.
(3 / 6)

சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இந்திய விமான நிறுவனங்கள் இந்த பாதிப்பு குறித்து பயணிகளுக்கு தகவல் அனுப்பி உள்ளது. விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் பயணிகளுக்கு கைகளால் எழுதப்பட்ட 'போர்டிங் பாஸ்' வழங்கப்படுகிறது  
(4 / 6)

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. என்ன பிரச்னை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தீர்வுகாணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
(5 / 6)

இந்த பாதிப்பு விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது. மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை