தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kkr Vs Srh, Ipl 2024 Final: வெற்றிக் கோப்பையை 3-வது முறை வென்ற கொல்கத்தா அணி.. போட்டியின் சிறந்த தருணங்களின் படங்கள்

KKR vs SRH, IPL 2024 Final: வெற்றிக் கோப்பையை 3-வது முறை வென்ற கொல்கத்தா அணி.. போட்டியின் சிறந்த தருணங்களின் படங்கள்

May 27, 2024, 07:31 AM IST

KKR vs SRH: ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 113 ரன்களுக்கு ஹைதராபாத் அணியை வீழ்த்தி இலக்கை எளிதாக விரட்டியடித்தது

  • KKR vs SRH: ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 113 ரன்களுக்கு ஹைதராபாத் அணியை வீழ்த்தி இலக்கை எளிதாக விரட்டியடித்தது
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் இறுதிப்போட்டியில் மிகக் குறைந்த அளவே 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி இலக்கை அடைந்தது.
(1 / 7)
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் இறுதிப்போட்டியில் மிகக் குறைந்த அளவே 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி இலக்கை அடைந்தது.(AP)
மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரிலேயே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்தார். இரண்டாவது ஓவரில் டிராவிஸ் ஹெட், வைபவ் அரோராவிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார். பின்னர் ஐந்தாவது ஓவரில் ஸ்டார்க்கிடம் ராகுல் திரிபாதி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார், இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவர்பிளேயில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. 
(2 / 7)
மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரிலேயே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்தார். இரண்டாவது ஓவரில் டிராவிஸ் ஹெட், வைபவ் அரோராவிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார். பின்னர் ஐந்தாவது ஓவரில் ஸ்டார்க்கிடம் ராகுல் திரிபாதி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார், இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவர்பிளேயில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. (AP)
அடுத்து பந்துவீசிய கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸலால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சரிவு நிற்கவில்லை. அவர் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
(3 / 7)
அடுத்து பந்துவீசிய கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸலால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சரிவு நிற்கவில்லை. அவர் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். (ANI)
 ஆண்ட்ரே ரஸ்ஸால் பந்து வீசிய 15ஆவது ஓவரில் கேப்டன் பாட் கம்மின்ஸ் வீழ்ந்தார். கே.கே.ஆரின் ஆறு பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தினர், எஸ்.ஆர்.எச் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
(4 / 7)
 ஆண்ட்ரே ரஸ்ஸால் பந்து வீசிய 15ஆவது ஓவரில் கேப்டன் பாட் கம்மின்ஸ் வீழ்ந்தார். கே.கே.ஆரின் ஆறு பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தினர், எஸ்.ஆர்.எச் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. (PTI)
கே.கே.ஆர் சேஸின் இரண்டாவது ஓவரில் சுனில் நரேனை ஆட்டமிழக்கச் செய்து பட் கம்மின்ஸ் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சிறிது நம்பிக்கை அளித்தார், ஆனால், வெங்கடேஷ் ஐயர் பந்துவீச்சாளர்களுக்கு அடுத்து எந்தவொரு வாய்ப்பும் தரவில்லை.
(5 / 7)
கே.கே.ஆர் சேஸின் இரண்டாவது ஓவரில் சுனில் நரேனை ஆட்டமிழக்கச் செய்து பட் கம்மின்ஸ் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சிறிது நம்பிக்கை அளித்தார், ஆனால், வெங்கடேஷ் ஐயர் பந்துவீச்சாளர்களுக்கு அடுத்து எந்தவொரு வாய்ப்பும் தரவில்லை.(AP)
வெங்கடேஷ் 26 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 
(6 / 7)
வெங்கடேஷ் 26 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். (AP)
11-வது ஓவரின் 3ஆவது பந்தில், வெங்கடேஷ் சிங்கிள் எடுத்து கேகேஆர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 
(7 / 7)
11-வது ஓவரின் 3ஆவது பந்தில், வெங்கடேஷ் சிங்கிள் எடுத்து கேகேஆர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. (PTI)
:

    பகிர்வு கட்டுரை