தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  International Space Station: ‘மிஸ் பண்ணிடக் கூடாது’-நம்ம சென்னையில் இருந்து வெறும் கண்களால் விண்வெளி மையத்தை பார்க்கலாம்

International Space Station: ‘மிஸ் பண்ணிடக் கூடாது’-நம்ம சென்னையில் இருந்து வெறும் கண்களால் விண்வெளி மையத்தை பார்க்கலாம்

May 10, 2024, 04:42 PM IST

Chennai Science center: நம்ம சென்னையில் இருந்து வெறும் கண்ணால் விண்வெளி மையத்தை இன்று பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Chennai Science center: நம்ம சென்னையில் இருந்து வெறும் கண்ணால் விண்வெளி மையத்தை இன்று பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது நமது கிரகத்தைச் சுற்றி வரும் ஒரு பெரிய விண்கலமாகும். இது நிலையான வேகம் மற்றும் திசையுடன் பூமியைச் சுற்றி வருகிறது. விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கும் பரிசோதனைகள் நடத்துவதற்கும் இடமாக இது செயல்படுகிறது.
(1 / 5)

இதையெல்லாம் நம் கண்களால் பார்க்க காத்திருக்கும் வேளையில் நாசா ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் இன்று இரவு 7.09 மணி முதல் சென்னையில் இருந்து வெறும் கண்களால் பார்க்க முடியும். அது 7 நிமிடங்களுக்கு வானில் தெரியும் என்றும் தெரிவித்துள்ளது.
(2 / 5)

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த விண்வெளி ஆய்வு மையம் பூமியை 13 முறை சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(3 / 5)
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த விண்வெளி ஆய்வு மையம் பூமியை 13 முறை சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(REUTERS)
இது மிகவும் பிரகாசமாக இருப்பதால் மக்கள் இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் மையம் போன்ற இடங்களில் இதனை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
(4 / 5)
இது மிகவும் பிரகாசமாக இருப்பதால் மக்கள் இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் மையம் போன்ற இடங்களில் இதனை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.(Getty Images via AFP)
அறிவியல் மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஆர்வத்துடன் இதைக் காண காத்திருக்கின்றனர். பூமியில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் உயரத்தில் வானில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க அனைத்து மக்களும் உற்சாகமாக உள்ளனர். சென்னையில் இருந்து மட்டுமே பார்க்க முடியும் என்பதால் சென்னைவாசிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
(5 / 5)
அறிவியல் மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஆர்வத்துடன் இதைக் காண காத்திருக்கின்றனர். பூமியில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் உயரத்தில் வானில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க அனைத்து மக்களும் உற்சாகமாக உள்ளனர். சென்னையில் இருந்து மட்டுமே பார்க்க முடியும் என்பதால் சென்னைவாசிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.(REUTERS)
:

    பகிர்வு கட்டுரை