தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  India In Icc Events Final: இதுவரை 12 பைனல், 5 கோப்பை! 11 ஆண்டு கால ஐசிசி கோப்பை வறட்சிக்கு டாட் முயற்சியில் இந்தியா

India in ICC Events Final: இதுவரை 12 பைனல், 5 கோப்பை! 11 ஆண்டு கால ஐசிசி கோப்பை வறட்சிக்கு டாட் முயற்சியில் இந்தியா

Jun 29, 2024, 07:21 PM IST

இந்தியா முதல் முறையாக 1983 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் விளையாடியது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் கபில் தேவ். முதல் முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தபோது வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. மெத்தமாக 5 முறை ஐசிசி பைனலில் நுழைந்த இந்தியா 5 வெற்றி, 7 தோல்வியை தழுவியுள்ளது

  • இந்தியா முதல் முறையாக 1983 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் விளையாடியது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் கபில் தேவ். முதல் முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தபோது வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. மெத்தமாக 5 முறை ஐசிசி பைனலில் நுழைந்த இந்தியா 5 வெற்றி, 7 தோல்வியை தழுவியுள்ளது
1983, 2003, 2011 மற்றும் 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தகுதி பெற்றது. இதில் 1983, 2011 உலகக் கோப்பைகளை வென்று சாம்பியன் ஆனது. 2003, 2023 தோல்வியை தழுவியது. அதேபோல் டி20 உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை 2007, 2014 ஆகிய தொடர்களின் இறுதி போட்டியில் நுழைந்துள்ளது. இதில் 2007இல் சாம்பியன், பின்னர் 2014இல் ரன்னர் அப் ஆகியுள்ளது. முதல் முறையாக 2002இல் இலங்கையுடன் இணைந்து சாம்பியன்ஸ் டிராபியை பகிர்ந்து கொண்டது. 2013இல் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. 2000, 2017 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி பெறாமல் தோல்வியை தழுவியது. 2021, 2023 என இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியபோதிலும், இரண்டு முறையும் தோல்வியை தழுவியது
(1 / 6)

2014 டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்தியா 130 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 77 ரன்கள் அடித்தார். இலங்கை 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குமார சங்ககாரா 52 ரன்கள் எடுத்தார்
(2 / 6)

2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் 338 ரன்கள் எடுக்க, இதை சேஸ் செய்த இந்தியா 158 ரன்களில் ஆல்அவுட்டானது
(3 / 6)

முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2021இல் நடைபெற்றது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 217, நியூசிலாந்து 249 ரன்கள் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 170 ரன்களுக்கு ஆல்அவுட்டாக, நியூசிலாந்து 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
(4 / 6)

இதன் பின்னர் 2023இல் நடந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கும் இந்தியா தகுதி பெற்றது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுக்க, இந்தியா 296 ரன்களில் ஆல்அவுட்டானது. ஆஸ்திரேலியா இரம்டாவது இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட 234 ரன்களக்கு ஆல்அவுட்டானது
(5 / 6)

கடந்த ஆண்டில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவியது. இந்தியா 240 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுமார் 10 ஆண்டுகள் கழித்து டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் இந்தியா, 11 ஆண்டு கால ஐசிசி கோப்பை வறட்சியை போக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை