promotionBanner
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘நடுவரின் ரெட் கார்டு.. ரசிகர்கள் வன்முறை.. 56 பேர் பலி.. கால்பந்து போட்டியில் களேபரம்!

‘நடுவரின் ரெட் கார்டு.. ரசிகர்கள் வன்முறை.. 56 பேர் பலி.. கால்பந்து போட்டியில் களேபரம்!

Dec 03, 2024, 10:41 AM IST

கினியாவில் நடந்த கால்பந்து போட்டியில் நடுவரின் ரெட் கார்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்களிடம் நடந்த மோதல், கலவரமாக மாறியதில் 56 பேர் கொல்லப்பட்டனர். அது தொடர்பான முழு தகவல் இதோ!

  • கினியாவில் நடந்த கால்பந்து போட்டியில் நடுவரின் ரெட் கார்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்களிடம் நடந்த மோதல், கலவரமாக மாறியதில் 56 பேர் கொல்லப்பட்டனர். அது தொடர்பான முழு தகவல் இதோ!
கினியாவில் ராணுவ ஆட்சிக்குழு தலைவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கால்பந்து போட்டியில் ரசிகர்களிடம் ஏற்பட்ட மோதலில் இதுவரை 56 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
(1 / 4)
கினியாவில் ராணுவ ஆட்சிக்குழு தலைவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கால்பந்து போட்டியில் ரசிகர்களிடம் ஏற்பட்ட மோதலில் இதுவரை 56 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.(REUTERS)
என்'ஜெரெகோரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இரண்டு ரெட் கார்டு வழங்கிய நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மைதானத்தில் இருந்து ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
(2 / 4)
என்'ஜெரெகோரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இரண்டு ரெட் கார்டு வழங்கிய நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மைதானத்தில் இருந்து ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.(Social media via REUTERS)
இந்த மோதல் கலவரமாக மாறியதில், 56 பேர் நெரிசலில் சிக்கியும் தாக்கப்பட்டும் உயிரிழந்தனர். இரண்டு அமைச்சர்கள் உட்பட போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள் வெளியேற விடாமல் தடுக்கப்பட்டனர், இதனால் கல்லெறிதல் மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு சம்பவங்கள் அங்கு நடந்தேறியது.
(3 / 4)
இந்த மோதல் கலவரமாக மாறியதில், 56 பேர் நெரிசலில் சிக்கியும் தாக்கப்பட்டும் உயிரிழந்தனர். இரண்டு அமைச்சர்கள் உட்பட போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள் வெளியேற விடாமல் தடுக்கப்பட்டனர், இதனால் கல்லெறிதல் மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு சம்பவங்கள் அங்கு நடந்தேறியது.(Social media via REUTERS)
இந்த சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கவும், கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. சடலங்கள் குவிந்துள்ளதால், பிணவறையில் இடமின்றி தவிப்பதாகவும் தகவல்கள் வருகிறது.
(4 / 4)
இந்த சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கவும், கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. சடலங்கள் குவிந்துள்ளதால், பிணவறையில் இடமின்றி தவிப்பதாகவும் தகவல்கள் வருகிறது.(AFP)
:

    பகிர்வு கட்டுரை