தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Theevu Thidal Exhibition: சென்னை தீவுத்திடல் கண்காட்சியை மிஸ் பண்ணாதீங்க!

Theevu Thidal Exhibition: சென்னை தீவுத்திடல் கண்காட்சியை மிஸ் பண்ணாதீங்க!

Mar 06, 2023, 05:45 PM IST

Chennai: சென்னையில் மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள தீவுத்திடலில் சுற்றுலா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 9ம் தேதியுடன் பொருட்காட்சி நிறைவு பெறுகிறது.

47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடைபெற்று வருகிறது.
(1 / 10)

சிறுவர்களுக்கு ரூ.25ம் பெரியவர்களுக்கு ரூ.40ம் நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
(2 / 10)

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையிலும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
(3 / 10)

பொருட்காட்சியை சுற்றிப் பார்க்கும் வகையில் மினி ரயிலும் உள்ளே இயக்கப்படுகிறது. இதற்கு நபருக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
(4 / 10)

சுகாதாரத் துறையின் சாதனைகள் தனி ஸ்டாலில் விளக்கப்பட்டிருக்கிறது. அங்கே சுகாதாரம் குறித்து பல்வேறு தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
(5 / 10)

பெரியவர்கள், சிறியவர்கள், குழந்தைகளுக்கு அவசர காலத்தில் முதலுதவி சிகிச்சை செய்வது எப்படி என்பதை மருத்துவ ஊழியர்கள் விளக்கிக் கூறுகின்றனர்.
(6 / 10)

தோட்டக் கலைத் துறையின் ஸ்டால்கள் பார்க்க பசுமையாக காட்சியளிக்கிறது. விதைகள், தேன், இயற்கை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மாடித்தோட்டம் அமைப்பது குறித்த விளக்கப் படங்களும் இடம்பெற்றுள்ளது.
(7 / 10)

உணவகமும் இயங்கி வருகிறது. இதுதவிர, பிரபலமான டெல்லி அப்பளம் கடை, தேநீர், கூல் டிரிங்ஸ் கடை ஆகியைவும் உள்ளது.
(8 / 10)

10 ரூபாய் நாணயம் செல்லும் என ரிசர்வ் வங்கி ஸ்டாலில் விளக்கப்படம் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.10 நாணயம் செல்லாது என கூறப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஸ்டாலில், பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்து புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிச் செல்லவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
(9 / 10)

ராட்டினம், ஸ்நோ வேர்ல்டு என குழந்தைகளை கவர்ந்திழுக்கும் பல விஷயங்கள் இங்கே இருப்பதால் குடும்பத்துடன் மிஸ் பண்ணா சென்று வாருங்கள்.
(10 / 10)

:

    பகிர்வு கட்டுரை