தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vitamin B12: உடலில் வைட்டமின் பி12 அதிகரிப்பால் என்னென்ன நோய்கள் ஏற்படும் தெரியுமா?

Vitamin B12: உடலில் வைட்டமின் பி12 அதிகரிப்பால் என்னென்ன நோய்கள் ஏற்படும் தெரியுமா?

Jul 02, 2024, 11:37 AM IST

Excessive Vitamin B12: உடலில் வைட்டமின் பி12 அதிகரிப்பால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம்.

  • Excessive Vitamin B12: உடலில் வைட்டமின் பி12 அதிகரிப்பால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய உடல் சீராக இயங்குவதற்கு வைட்டமின் பி12 மிகவும் அவசியம். அதோடு ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதில் வைட்டமின் பி12 குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளது.
(1 / 7)

உடலில் வைட்டமின் பி12 பற்றாக்குறையால் பசியின்மை, மலச்சிக்கல், திடீர் எடை குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரும்பாலான மருத்துவர்கள் பி12 நிறைந்த உணவுப்பொருள்களோடு மாத்திரையையும் பரிந்துரைகின்றனர்.
(2 / 7)

அதேசமயம் அதிகப்படியான பி12 எடுத்துக்கொள்வதினால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பக்கவிளைவுகள் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
(3 / 7)

பெரும்பாலான பெண்கள் உடல் வலி, கால் வலி, இடுப்பு வலிக்கும் பி12 ஊசியை மருத்துவர்களின் ஆலோசனையின்றி செலுத்துகின்றனர். இதனால் ஒருசிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(4 / 7)

உடலில் பி12 அதிகரிப்பால் லேசான வயிற்றுப்போக்கு, அரிப்பு, தோல் வெடிப்பு, தலைவலி, தலைசுற்றல், குமட்டல், வாந்தி, நுரையீரல் வீக்கம் மற்றும் இதய செயலிழப்பு, நரம்பு ரத்த உறைவு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
(5 / 7)

ஒரு சிலருக்கு பி12 ஊசி அல்லது மாத்திரை எடுத்துக்கொண்ட உடனே முகம், நாக்கு மற்றும் தொண்டை வீக்கம், விழுங்குவதில் சிரமம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அந்த நேரத்தில் உடனே மருத்துவரை அணுகினால் பெரிய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
(6 / 7)

நம் உடலுக்கு தேவையான பி12 கிடைக்க முட்டை, பாலாடைக்கட்டி, மீன், மத்தி மீன், ஈரல், சிவப்பு இறைச்சி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை