தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Devanathan Yadav Arrest: ’மயிலாப்பூர் வாசிகள் புகார் எதிரொலி! நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது!’

Devanathan Yadav Arrest: ’மயிலாப்பூர் வாசிகள் புகார் எதிரொலி! நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது!’

Aug 13, 2024, 03:38 PM IST

50 கோடி வரை மோசடி நடைபெற்றதாக 140-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து உள்ளனர்.

  • 50 கோடி வரை மோசடி நடைபெற்றதாக 140-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து உள்ளனர்.
நிதி மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், பாஜக ஆதரவாளரும் ஆன தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு உள்ளார். 50 கோடி வரை மோசடி நடைபெற்றதாக 140-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து உள்ளனர். 
(1 / 8)

தனியார் தொலைக்காட்சி உரிமையாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராகவும் உள்ள தேவநாதன் யாதவ் உள்ளார். 
(2 / 8)

சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட்’ என நிதி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். 1872 ஆம் ஆண்டு முதல் இந்த நிதி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இண்ட் அநிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். 
(3 / 8)

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிக அளவில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளனர். இந்த நிறுவனத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து நிதியை பெற்று சுமார் 50 கோடி வரை நிதி மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. 
(4 / 8)

இது தொடர்பாக தேர்தல் நேரத்திலேயே தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்தது. இந்த மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி அந்த நிறுவனத்திற்கு முன்பாக 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 
(5 / 8)

தேர்தல் பரப்புரை காலத்தில் நிதி மோசடி புகார் எழுந்த நிலையில் சிவகங்கை தொகுதியில் பரப்புரை செய்ய இருந்த அமித் ஷாவின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது.   
(6 / 8)
தேர்தல் பரப்புரை காலத்தில் நிதி மோசடி புகார் எழுந்த நிலையில் சிவகங்கை தொகுதியில் பரப்புரை செய்ய இருந்த அமித் ஷாவின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது.   (BJP Media)
தேவநாதன் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திருச்சியில் தேவநாதன் யாதவ்வை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
(7 / 8)

கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார்.  இதில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 677 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வெற்றி பெற்றார்.  2 லட்சத்து 22 ஆயிரத்து 13 வாக்குகளை பெற்ற அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் இரண்டாம் இடமும், ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 788 வாக்குகள் பெற்ற தேவநாதன் யாதவ் மூன்றாம் இடமும் பிடித்து இருந்தனர். 
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை