promotionBanner
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘ஒரு துளி போதும்.. அதை அனுபவித்தால் தான்.. ஆட்டமெட்டிக்கா வந்து சேரும்’ அன்னபூரணியின் உபதேசம்!

‘ஒரு துளி போதும்.. அதை அனுபவித்தால் தான்.. ஆட்டமெட்டிக்கா வந்து சேரும்’ அன்னபூரணியின் உபதேசம்!

Dec 03, 2024, 09:17 AM IST

திருவண்ணாமலையில் தனக்கென ஆசிரமம் வைத்து, தனக்கென பக்தர்கள் கூட்டத்தை வைத்து, அவர்களுக்கு தேவையான அறிவுரையை அவ்வப்போது கூறி வரும் அன்னபூரணி அரசு அம்மா ரோஹித், சமீபத்திய வீடியோவில் கூறிய பொன்மொழிகள் இதோ உங்களுக்காக!

  • திருவண்ணாமலையில் தனக்கென ஆசிரமம் வைத்து, தனக்கென பக்தர்கள் கூட்டத்தை வைத்து, அவர்களுக்கு தேவையான அறிவுரையை அவ்வப்போது கூறி வரும் அன்னபூரணி அரசு அம்மா ரோஹித், சமீபத்திய வீடியோவில் கூறிய பொன்மொழிகள் இதோ உங்களுக்காக!
அன்னபூரணி அரசு அம்மா ரோஹித் திருமணம் சமீபத்தில் முடிந்தது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் அவர் ஆற்றிய அருளுரை இதோ:
(1 / 6)

இறைவனை நேருக்கு நேர் சந்திப்பதை தவறவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு இறைவனை ஒவ்வொருவரும் நேருக்கு நேர் சந்திக்க முடியும். மனிதனின் நோக்கமே, இறை சக்தியோடு இரண்டற சங்கமிப்பது தான், உங்கள் பிறவி நோக்கமே. ஆனால், எல்லாரும் வெளி சார்ந்த விசயங்களில் சிக்கிக் கொண்டு, மாட்டிக் கொண்டு உங்கள் பிறவி பயனை தவறவிடுகிறீர்கள். 
(2 / 6)

அந்த மூடப்பழக்க வழக்கங்களில் சிக்கியிருக்கிறீர்கள். இறை சக்தியை அடைய எளிய வழி, அன்பு என்பதை கையில் எடுங்கள். இறைவனிடம் ஒரு துளி அன்பு செலுத்தினால் போதும். அது பல மடங்காக உங்களுக்கு திரும்ப கிடைத்து, நீங்கள் யார் என்பதை உங்களுக்கு உணர வைக்கும்.
(3 / 6)

இந்த சமுதாயமே உங்களை வியந்து பார்க்கும் அளவிற்கு உங்களை உச்சபட்ச தன்மையில் வாழ வைக்கும். உங்களின் பிறவி பயனையும் அடைய வைக்கும். நீங்கள் செய்ய வேண்டியது ஒரு துளி அன்பு தான். நான் மலேஷிய தரிசனத்திற்கு சென்ற போது, நிறைய பக்தர்கள் என்னிடம் கேட்ட கேள்வி இது தான். எங்கள்  தேவையை இறைவனிடம் எப்படி கேட்பது என்று அவர்கள் கேட்டார்கள்.
(4 / 6)

‘நீங்கள் ஏன் கேட்க வேண்டும்?’ என்று நான் கேட்டேன். ஒரு குழந்தை, தனக்கு வேண்டியதை தன் தாயிடம் கேட்குமா? என்று கேட்டேன். உங்களுக்குள் இருக்கும் இறை சக்தியை உணருங்கள் என்று கூறினேன்.
(5 / 6)

நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு தேவையானது, தேவையான நேரத்தில் ஆட்டோமெடிக்கா வந்து சேரும். மனிதர்களின் அன்பு எதிர்பார்ப்பானது, ஆனால் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு இறை சக்தியுடையது. அதை அனுபவித்தால், உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை. இறை சக்தியை உணர்ந்து கொண்டாட்டமாக வாழுங்கள்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை