(4 / 6)ரஜினியைவிட சிவாஜிராவ் கெய்க்வாட்டை ரொம்பப்பிடிக்கும் என்று சொல்கிறீர்கள். ரஜினியின் ரியல் லைஃப் ஆரா(ஒளி) எப்படி உங்களுக்கு தாக்கத்தைத் தருகிறது?பதில்: சில பேர் பத்து அடி தூரத்தில் உட்காரும்போதே எனர்ஜி நமக்கு ஃபீல் ஆகும். பாஸிட்டிவ் வைப் ஃபீல் ஆகும். அது ரொம்ப ரொம்ப குறைவான மனிதர்களிடத்தில் தான் அப்படி ஃபீல் ஆகும். அவங்க கூடயே டிராவல் பண்ணனும்னு தோணும். ஒருத்தர் பலரையும் அட்ராக்ட் பண்றார் அப்படியென்றால், அது சாதாரணமாக நடிப்பு மற்றும் ஸ்டைலால் மட்டும் அது நடந்துவிடாது. அதைத்தாண்டி ஏதோ ஒன்று ரஜினி சார்கிட்ட இருக்கு.ஒரு மனிதனாக அவர் இன்னொருத்தருக்குக் கொடுக்கும் மரியாதை, இன்னொருத்தருக்கு கொடுக்கும் டைம், நம் எல்லோரும் அப்படி தான் இருப்போம். ஆனால், அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ஒரு மனிதர் அப்படி செய்யும்போது, அது பலமடங்கு பெரியதாகத் தெரிகிறது