(3 / 6)கவுண்டமணி - செந்திலுக்கு இணையாக டஃப் பைட் கொடுத்தது நீங்கதான்னு சொல்றாங்க?அப்படியில்லை. கவுண்டமணி - செந்திலுக்கு எழுதினது வீரப்பன் தான் எழுதினார். அவர் யாரை இன்ஸ்பையர் பண்ணி எழுதுறார், அமெரிக்க நடிகர்களான ஸ்டான் லாரல் - ஆலிவர் ஹார்டியை இன்ஸ்பையர் செய்து எழுதுறார். மாலைக்கண் பண்ணுனது எல்லாம் லாரல் - ஹார்டி பண்ணுனது தானே. நான் என்னவென்றால், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டேன். எனக்கு கேரக்டராகத் தான் கொடுப்பாங்க. எனக்கு 10 நாள்கள், 15 நாட்கள் படத்தில் நடிக்கிறதுக்கு கொடுப்பாங்க. அவங்க இரண்டு நாளில் 8 சீன் நடிச்சிட்டு கிளம்பிடுவாங்க. நானும் கவுண்டமணியும் செந்திலும் மூணுபேருமே நடிச்சிருப்போம்.உங்களது படங்களில் நீங்கள் பேசும் வசனங்கள் பிரத்யேகமாக இருக்கும். அது எப்படி சார்?நம்ம மெட்ராஸை எடுத்துக்கிட்டாலே, எது வேணும்னாலும் கிடைக்கும். கொஞ்சம் தாண்டி, திருவல்லிக்கேணி பக்கம் போங்க. அங்க பேசுற தமிழ் - உருது கலந்து பேசுறதே கேட்டீங்கன்னா, சிரிச்சே செத்துடுவீங்க. அப்படி பேசுறதுக்கு இப்பவும் ஆட்கள் இருக்காங்க. மயிலாப்பூர் பக்கம் போனால் ஐயர் பேசுறது மாதிரி பேசுவானுங்க. பெரம்பூர் பக்கம்போனால், ஆங்கிலோ இந்தியன்ஸ். வாட் மேன்னு பேசுவாங்க. இந்த மாதிரி மெட்ராஸில் நிறைய விஷயங்கள் இருக்கு.