தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  71வது தேசிய விருதுகள் அறிவிப்பு.. நான்கு விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. முழு விவரம்

71வது தேசிய விருதுகள் அறிவிப்பு.. நான்கு விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. முழு விவரம்

Published Aug 01, 2025 11:55 PM IST

71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவுக்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. இதில் பார்க்கிங் படம் மூன்று விருதுகளை வென்றுள்ளன.

  • 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவுக்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. இதில் பார்க்கிங் படம் மூன்று விருதுகளை வென்றுள்ளன.
கடந்த 2023இல் வெளியான பார்க்கிங் படத்துக்கு சிறந்த பிராந்திய மொழி படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என மூன்று விருதுகளும், தனுஷ் நடித்த வாத்தி இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது என மொத்தம் நான்கு விருதுகள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளன
(1 / 6)

அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2023இல் வெளியான பிளாக் காமெடி த்ரில்லர் படமான பார்க்கிங் சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருதை வென்றுள்ளது. அத்துடன் படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது. ஹரீஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரவேற்பை பெற்றது
(2 / 6)

வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரகனி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி ரிலீசாகி வரவேற்பை பெற்ற வாத்தி படத்துக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது
(3 / 6)

பார்க்கிங் படத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். அத்துடன் மலையாள படமான பூக்காலம் என்ற படத்தில் நடித்த விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது
(4 / 6)

அட்லி இயக்கிய பாலிவுட் படமான ஜவான் படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். அவருடன், 12th பெயில் என்ற படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸியும் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்
(5 / 6)

பாலிவுட் படமான மிஸஸ் சாட்டர்ஜி vs நார்வே படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை