தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Assam Cm Tweet: சாலையைக் கடக்க முயன்ற காண்டாமிருகம் - தட்டி விட்டுச் சென்ற லாரி!

Assam CM Tweet: சாலையைக் கடக்க முயன்ற காண்டாமிருகம் - தட்டி விட்டுச் சென்ற லாரி!

Oct 10, 2022, 08:00 PM IST

google News
காசிரங்கா உயிரே பூங்கா பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற காண்டாமிருகத்தின் மீது லாரி மோதிய வீடியோ காட்சியை அசாம் மாநில முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காசிரங்கா தேசிய பூங்கா அசாம் மாநிலத்தில் உள்ளது. ஐநா சபையின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக இந்த காசிரங்கா உயிரியல் பூங்கா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இங்கு வாழ்ந்து வரும் உயிரினங்கள் மற்றும் விலங்கினங்களைப் பேரிடர், மனித விலங்கு மோதல் வேட்டை போன்ற சிக்கல்களிலிருந்து பாதுகாக்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இருப்பினும் மனித விளங்கும் மோதல் என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் இதனை அறிவுறுத்தும் விதமாக அசாம் மாநிலம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், காசிரங்கா பூங்கா பகுதிகளில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில், அங்கு வாழும் காண்டாமிருகம் ஒன்று சாலையைக் கடக்க முயன்ற போது சாலையின் குறுக்கே வந்த லாரி மீது எதார்த்தமாக மோதியது. ஆனால் இதனைக் கண்ட காண்டாமிருகம் சற்று சுதாரித்துக் கொண்டதால் பெரிய சேதம் ஏதும் ஏற்படாமல் தப்பி மீண்டும் காட்டுக்குள் ஓடி விட்டது.

அடுத்த செய்தி