தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Exchange: இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்ற நாளையே கடைசி தேதி!

Exchange: இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்ற நாளையே கடைசி தேதி!

Marimuthu M HT Tamil

Oct 06, 2023, 07:19 PM IST

google News
இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்ற நாளையே கடைசி தேதி ஆகும்.
இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்ற நாளையே கடைசி தேதி ஆகும்.

இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்ற நாளையே கடைசி தேதி ஆகும்.

வங்கிகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் நாளை, அதாவது வரும் அக்டோபர் 7ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அதன்பிறகும் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளமுடியும் என்றும், ஆனால் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

மேலும் பொதுமக்கள் தபால் மூலமாகவும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு இந்த நோட்டுக்களை அனுப்பி வங்கிக்கணக்கில் வரவு வைத்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிற வங்கிகளில் மாற்றிக்கொள்ள முடியாது எனவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. 

முன்னதாக 2016ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே-19ஆம் தேதி அறிவிப்பினை வெளியிட்டது. அதேபோல், இந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு பின், அது அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த கடைசி நாள் நாளை தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஒருவர் அதிகபட்சமாக ரூ.20ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக்கொள்ளலாம் அல்லது வரவு வைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசுத்துறைகள் உச்ச வரம்பின்றி ரூ.2ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி