தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ‘ஸ்ரீ’ என்ற வார்த்தைதான் ஸ்ரீலங்கா விலங்காமல் போக காரணம்! வானியலாளர் அனுர பெரேரா வேதனை!

‘ஸ்ரீ’ என்ற வார்த்தைதான் ஸ்ரீலங்கா விலங்காமல் போக காரணம்! வானியலாளர் அனுர பெரேரா வேதனை!

Kathiravan V HT Tamil

Apr 19, 2023, 03:11 PM IST

google News
‘ஸ்ரீ’ என்ற சொல்லை வாகனங்களின் எண் பலகைகளுக்கு பயன்படுத்திய பின்னரே சிங்கள - தமிழ் சமூகங்களிற்கு இடையில் மோதல் ஆரம்பமானது -
‘ஸ்ரீ’ என்ற சொல்லை வாகனங்களின் எண் பலகைகளுக்கு பயன்படுத்திய பின்னரே சிங்கள - தமிழ் சமூகங்களிற்கு இடையில் மோதல் ஆரம்பமானது -

‘ஸ்ரீ’ என்ற சொல்லை வாகனங்களின் எண் பலகைகளுக்கு பயன்படுத்திய பின்னரே சிங்கள - தமிழ் சமூகங்களிற்கு இடையில் மோதல் ஆரம்பமானது -

சிலோன் என்ற பெயரை ஸ்ரீலங்கா என மாற்றியதே இலங்கை எதிர்க்கொள்ளும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என்று இலங்கை வானியலாளர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார். ’ஸ்ரீ’ என்ற பெயரே கடந்த பல ஆண்டுகளாக இலங்கை எதிர்க்கொண்ட பேரழிவுக்கு காரணம் என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இலங்கையை சேர்ந்த அறிவியல் எழுத்தாளரான அனுர சி அனுர சி பெரேரா வானியலாளரும் கூட அமெரிக்காவில் வசிக்கும் அவர் SWRD பண்டாரநாயக்க விஜயகுமாரதுங்க படுகொலை முதல் ’ஸ்ரீ’ என பெயரில் தொடங்கும் அரச நிறுவனங்கள் திவால் நிலையை அடைந்தமைக்கும் பெயர் மாற்றமே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடைசி மன்னனின் பெயர் கூட ஸ்ரீவிக்கிரமசிங்க ராஜசிங்க எனவும் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கட்சிகள் - தலைவர்கள் அரசாங்க நிறுவனங்களின் பெயர்கள் முன்னாள் ‘ஸ்ரீ’ என்ற பெயரை பயன்படுத்தியதே பெரும் பின்னடைவுக்கும் திவால் நிலையை அடைந்ததற்கும் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

1956ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடங்கப்பட்டது முதல் எங்கள் நாட்டுக்கு தீமையான காலம் ஆரம்பமானது என்று தெரிவித்துள்ள அவர், ‘ஸ்ரீ’ என்ற சொல்லை வாகனங்களின் எண் பலகைகளுக்கு பயன்படுத்திய பின்னரே சிங்கள - தமிழ் சமூகங்களிற்கு இடையில் மோதல் ஆரம்பமானது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி