தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Stock Analysis: ஷேர் வாங்கலாம் வாங்க-2: Roe, Debt-equity Ratio மூலம் லாபம் தரும் பங்குகளை தேர்வு செய்வது எப்படி?

Stock Analysis: ஷேர் வாங்கலாம் வாங்க-2: ROE, Debt-Equity Ratio மூலம் லாபம் தரும் பங்குகளை தேர்வு செய்வது எப்படி?

Kathiravan V HT Tamil

Jan 20, 2025, 06:40 AM IST

google News
Stock Analysis: ஷேர் வாங்கலாம் வாங்க தொடரின் முதல் பகுதியில் EPS, PE Ratio ஆகியவைகள் குறித்து பேசி இருந்தோம். ஷேர் மார்க்கெட்டில் ஒரு பங்கை வாங்க அடிப்படை ஆய்வில் அவசியம். இந்த தொடரில் Debt-Equity Ratio மற்றும் ROE அளவீடுகள் குறித்து அறியலாம்.
Stock Analysis: ஷேர் வாங்கலாம் வாங்க தொடரின் முதல் பகுதியில் EPS, PE Ratio ஆகியவைகள் குறித்து பேசி இருந்தோம். ஷேர் மார்க்கெட்டில் ஒரு பங்கை வாங்க அடிப்படை ஆய்வில் அவசியம். இந்த தொடரில் Debt-Equity Ratio மற்றும் ROE அளவீடுகள் குறித்து அறியலாம்.

Stock Analysis: ஷேர் வாங்கலாம் வாங்க தொடரின் முதல் பகுதியில் EPS, PE Ratio ஆகியவைகள் குறித்து பேசி இருந்தோம். ஷேர் மார்க்கெட்டில் ஒரு பங்கை வாங்க அடிப்படை ஆய்வில் அவசியம். இந்த தொடரில் Debt-Equity Ratio மற்றும் ROE அளவீடுகள் குறித்து அறியலாம்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகமாக டிமேட் கணக்குகள் தொடங்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது. சரியான அறிவு மற்றும் உத்தியுடன் அணுகினால் பங்குச் சந்தையில் பணம் அள்ளலாம். பங்குகளை பகுப்பாய்வு செய்வது எப்படி என்பதை இந்த தொடர் விரிவாக விளக்கி பங்கு வர்த்தகத்தில் ஜொலிக்க நம்பிக்கையை அளிக்கும்.

ஷேர் வாங்கலாம் வாங்க தொடரின் முதல் பகுதியில் EPS, PE Ratio ஆகியவைகள் குறித்து பேசி இருந்தோம். ஷேர் மார்க்கெட்டில் ஒரு பங்கை வாங்க அடிப்படை ஆய்வில் அவசியம். இந்த தொடரில் Debt-Equity Ratio மற்றும் ROE அளவீடுகள் குறித்து அறியலாம்.

Debt-Equity Ratio என்றால் என்ன?

முதலில் ஒரு தொழிலை நடத்த முதல் என்பது அவசியம். அதில் பாதி முதலீடு உங்களிடம் உள்ளது. மீதி முதலீடு உங்களிடம் இல்லை என்றால், அதை 2 விதமாக ஈடுகட்ட முடியும். நமக்கு தெரிந்தவர்களிடமோ அல்லது வங்கியிடமோ சென்று கடன் வாங்கலாம். அப்படி இல்லை என்றால் முதலீட்டாளர்களிடம் பேசி பங்குச்சந்தை மூலம் பணத்தை திரட்டலாம். இந்த அமைப்புதான் ’Equity’ என அழைக்கப்படுகிறது.

உதாரணமாக ’ABC’ என்ற நிறுவனம் தொழில் செய்ய மொத்தம் ஆயிரம் ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் 500 ரூபாய் ஏற்கெனவே நிறுவனத்திடம் உள்ளது. மீதம் உள்ள 500 ரூபாய் தொகையை பங்குச்சந்தை மூலம் Equity ஆக வாங்கி உள்ளார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிறுவனத்திற்கு கடன் தொகை ஏதும் இல்லை என்பதால், இந்த நிறுவனத்தின் Debt-Equity Ratio மதிப்பு ’0’ என கணக்கிடப்படுகிறது.

ஆனால் ‘XYZ’ என்ற நிறுவனத்திற்கும் தொழில் செய்ய ஆயிரம் ரூபாய் முதலீடு தேவை என்று வைத்துக் கொள்வோம். அவர்களிடம் ஏற்கெனவே 500 ரூபாய் மூலதனம் உள்ளது. மீதம் தேவைப்படும் தொகையை பங்குச்சந்தையில் முதலீட்டை பெறாமல் வங்கியில் இருந்து 500 ரூபாய் கடன் வாங்கி உள்ளார்கள் என வைத்துக் கொள்வோம். இந்நிறுவனத்தின் Debt-Equity Ratio மதிப்பு 500 (முதலீடு) / 500 (கடன்) = 1 என்று வரும். அதாவது ஒரு நிறுவனத்தின் எல்லாக் கடன்களையும் (Debt) Equity-யை கொண்டு டிவைட் செய்யும் போது வரும் எண்ணை Debt-Equity Ratio குறிக்கின்றது.

ROE (Return on Equity) என்றால் என்ன?

மேற்கண்ட நிறுவனம் முதலீடு செய்த தொகையில் இருந்து 200 ரூபாய் லாபம் சம்பாதித்து உள்ளது என வைத்துக் கொள்வோம். அந்நிறுவனம் வாங்கிய 500 ரூபாய் கடன் தொகைக்கு 10 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும் என கணக்கிட்டால், லாபத்தில் இருந்து கிடைத்த 50 ரூபாயை வட்டியாக திரும்ப செலுத்த வேண்டி இருக்கும். இதனால் XYZ நிறுவனத்தின் நிகர லாபம் 150 ரூபாயாக குறையும்.

நிகர லாபத்தையும், Equity தொகையையும் கொண்டு டிவைட் செய்யும் போது கிடைக்கும் மதிப்பை கொண்டு அந்நிறுவனத்தின் ROE (Return on Equity) மதிப்பீடு செய்யப்படுகிறது.

நிகர லாபமான 150 ரூபாயை Equity தொகையான 500 ரூபாயை கொண்டு டிவைட் செய்யும் போது 30 என்று வரும் மதிப்பே XYZ நிறுவனத்தின் ROE மதிப்பாகும். நிறுவனம் வைத்துள்ள பங்கு தொகைக்கு எவ்வளவு சதவீதம் லாபம் கிடைக்கிறது என்பதை ROE மதிப்பை கொண்டு அறியலாம். அடுத்த தொடரில் ROCE என்றால் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி