தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Republic Day: ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழா-பங்கேற்காத சந்திரசேகர் ராவ்!

Republic day: ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழா-பங்கேற்காத சந்திரசேகர் ராவ்!

Manigandan K T HT Tamil

Jan 26, 2023, 10:06 AM IST

google News
K.Chandrashekar Rao Chief minister of Telangana: தெலங்கானா ஆளுநர் மாளிகையில் நடந்த குடியரசு தின விழாவில் அந்த மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பங்கேற்கவில்லை. (@DrTamilisaiGuv)
K.Chandrashekar Rao Chief minister of Telangana: தெலங்கானா ஆளுநர் மாளிகையில் நடந்த குடியரசு தின விழாவில் அந்த மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பங்கேற்கவில்லை.

K.Chandrashekar Rao Chief minister of Telangana: தெலங்கானா ஆளுநர் மாளிகையில் நடந்த குடியரசு தின விழாவில் அந்த மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பங்கேற்கவில்லை.

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் நடந்த குடியரசு தின விழாவில் அந்த மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பங்கேற்கவில்லை. இது அந்த மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநருடனான கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை என்று பேசப்படுகிறது.

ஐதராபாத் உயர்நீதிமன்ற உத்தரவும் மீறப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்பாடு செய்திருந்த குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை.

அணிவகுப்பு மைதானங்களில் பரேடுகளை நடத்துமாறு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்த பின்னரும், இன்று காலை வரை அதுதொடர்பான எந்தவாரு அறிவிப்பையும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா அரசு வெளியிடவில்லை.

அதேநேரம், ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குடியரசு தின விழாவை ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவிலும் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் பங்கேற்கவில்லை.

“74ஆவது குடியரசு தினத்தையொட்டி, தெலங்கானா ஆளுநர் மாளிகையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தேன்” என்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் போது மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு சந்திரசேகர் ராவ் அரசுக்கு ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது.

எனினும், குடியரசு தின அணிவகுப்பு ஆளுநர் மாளிகையில் மட்டுமே நடத்தப்பட்டது. கோவிட் நிலைமைக்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் நடப்பது போல் அணிவகுப்பு மைதானத்தில் இந்த முறை நடைபெறவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை.

முன்னதாக, வழக்கறிஞர் கே.ஸ்ரீனிவாஸ் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி பி. மாதவி தேவி தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அமர்வு, குடியரசு தின விழா கொண்டாட்டங்களை நடத்தாததற்கு கோவிட்-19 நெறிமுறையை மாநில அரசு காரணம் காட்டுவதை ஏற்க முடியாது. குடியரசு தினத்தை பொருத்தமான முறையில் கொண்டாடுவது அனைத்து அரசியலமைப்பு அதிகாரிகளின் கடமையாகும். அதை மாநில அரசு தவிர்க்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

செகந்திராபாத் மைதானத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆளுநர் மாளிகையும், மாநில அரசும் இணைந்து குடியரசு தின விழாவை கொண்டாடியது நினைவுகூரத்தக்கது.

குடியரசு தின கொண்டாட்டத்தை தனியாக நடத்திக் கொள்ளுங்கள் என்று ஆளுநர் மாளிகைக்கு மாநில அரசு தெரிவித்திருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் மற்றும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இடையேயான மோதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. குறைந்தது 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததே மோதல் போக்குக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி