Republic Day 2023: பிரதமர் மோடி அணிந்திருந்த தலைப்பாகையை கவனிச்சிங்களா!
Jan 26, 2023, 10:35 AM IST
பிரதமர் நரேந்திர மோடி எந்தவொரு நிகழ்ச்சி சென்றாலும் அந்த நிகழ்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் உடை அணிந்து செல்வது வழக்கம்.
பிரதமர் நரேந்திர மோடி எந்தவொரு நிகழ்ச்சி சென்றாலும் அந்த நிகழ்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் உடை அணிந்து செல்வது வழக்கம். பெரும்பாலும் குர்தா அணிந்தபடியே பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.
குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அவர் தலைப்பாகை அணிந்து கலந்து கொள்வார். அந்தத் தலைப்பாகை அந்த நிகழ்ச்சியைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.
இன்று நாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி, இந்தியாவின் பன்முகத்தன்மையை குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பல வண்ண தலைப்பாகை அணிந்திருந்தார்.
கடந்த ஆண்டு, பிரதமர் மோடியின் உடையில் உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரின் தனித்துவமான தலைப்பாகை இருந்தது,
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியின் உடைகள் மிகவும் தனித்துவமாக இருக்கின்றன. கடந்த 9 ஆண்டுகளாக அவர் இதுபோன்று தனித்துவமான உடைகளையே அணிகிறார்.
இருப்பினும் பிரதமர் மோடி மற்ற சந்தர்ப்பங்களில் ஒரு குறிப்பிட்ட பழங்குடி அல்லது குறிப்பிட்ட பிராந்தியத்தின் பாரம்பரிய ஆடைகளை அணிந்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் பல திட்டங்களை தொடங்கி வைத்தபோது பாரம்பரிய காசி உடையில் காணப்பட்டார்.
முன்னதாக, தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தேசிய போர் நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டவுடன் அணிவகுப்பு விழா தொடங்கியது.
டாபிக்ஸ்