PM Modi : சூடு பிடிக்க துவங்கிய தேர்தல் களம் – என்டிஏ கூட்டணி எம்பிக்களுடன் பிரதமர் சந்திப்பு
Jul 31, 2023, 07:56 AM IST
PM Modi : பிரதமர் மோடி இன்று முதல் கூட்டணி கட்சிகளின் எம்பிக்களை சந்தித்து தேர்தல் குறித்து விவாதிக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, என்டிஏ கூட்டணியின் எம்பிக்களை இன்று சந்திக்கிறார். அந்த கூட்டத்தில் வரும் லோக்சபா தேர்தல் மற்றும் அதற்கு தயாராவது குறித்து விவாதிப்பதாக இருக்கும்.
என்டிஏ கூட்டணியின் எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்து வரும் சட்டமன்ற தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் குறித்து கலந்துரையாடுகிறார். எதிர்க்கட்சிகளை வீழ்த்தவும், அதற்கான திட்டங்களை வகுப்பது குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். அவர் ஆகஸ்ட் 10ம் தேதி எம்பிக்களையும், கட்சியின் தலைவர்களையும் சந்திக்கிறார்.
தேர்தல்கள் நெருங்குவதை தொடர்ந்து, பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் தொடர்கொண்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் கூட்டத்தை நடத்தினார்கள். 10 என்டிஏ குழுவினர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். இந்தக்குழுக்கள் 2024 பொதுத்தேர்தல் பணிக்காக அமைக்கப்பட்ட குழுக்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
என்டிஏ கூட்டணி தொகுதிகளில் தேர்தல் பணிகளை தீவிரமாக நடத்துவதற்காக இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் பிரதமர் நரேந்தி மோடி தலைமையில் மேற்கு உத்ரபிரதேவம், புதல்கண்ட் மற்றும் பிரிஜ் பகுதி எம்பிக்களின் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும். இதில் பாசு தேசிய தலைவர் ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள்.
என்டிஏ எம்பிக்கள் குழுவின் அடுத்த கூட்டம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிஸ்ஸா எம்பிக்களின் கூட்டம் 7 மணிக்கு நடைபெறும். இவை நாடாளுமன்ற கட்டிடம் அருகே நடைபெறும்.
10 எம்பிக்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். முதல் நாள் கூட்டத்தல் உத்ரபிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிஸ்ஸா, மேற்கு வங்க எம்பிக்கள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிஏ கூட்டணியின் வெள்ளிவிழா ஆண்டை 2024 தேர்தல் களத்தில் பாஜக சந்திக்கிறது.
டாபிக்ஸ்