Odisha Train Accident: ’ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய பிரதமர் கோர வேண்டும்’ ராகுல் காந்தி ட்வீட்
Jun 04, 2023, 08:33 PM IST
”இவ்வளவு வேதனையான விபத்துக்குப் பொறுப்பேற்று மோடி அரசு ஓடிவிட முடியாது. ரயில்வே அமைச்சரை பிரதமர் உடனடியாக ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும்!" ராகுல் காந்தி
“ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய பிரதமர் கோர வேண்டும்” என ஒடிசா ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் பாலசோரில் 275 பேர் உயிரிழந்தது மற்றும் 1000 பேர் காயமடைந்துள்ள சோகமான ரயில் விபத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவை பிரதமர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "270 பேர் இறந்த பிறகும் இதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை! இவ்வளவு வேதனையான விபத்துக்குப் பொறுப்பேற்று மோடி அரசு ஓடிவிட முடியாது. ரயில்வே அமைச்சரை பிரதமர் உடனடியாக ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும்!" என கூறி உள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங்கும் ஒடிசாவில் நடந்த மூன்று ரயில் சோகத்தை அடுத்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “275 உயிரிழப்புகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைவதற்கு காரணமான மூன்று ரயில் மோதிக்கொண்ட விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பாலசோர், கட்டாக் மற்றும் புவனேஸ்வரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த நோயாளிகளுக்கு மாநில அரசின் ஆதரவுடன் மையம் அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறது. நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. 24 மணிநேரமும் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களின் குழுக்கள் உள்ளன. இறந்தவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சி செய்கிறோம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
ஒடிசா அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை மூன்று ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 288 இல் இருந்து 275 ஆக மாற்றியமைத்ததுள்ள நிலையில் மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை 1,175 பேர் என கூறி உள்ளது. சில உடல்கள் இருமுறை எண்ணப்பட்டதாக தலைமைச் செயலாளர் பிகே ஜெனா தெரிவித்தார். "விரிவான சரிபார்ப்பு மற்றும் பாலசோர் மாவட்ட ஆட்சியரின் அறிக்கைக்குப் பிறகு, இறுதி எண்ணிக்கை 275 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.