Rameshwaram Cafe blast: பெங்களூரு குண்டு வெடிப்பு விவகாரம்! பாஜக பிரமூகரை தூக்கிய NIA! கர்நாடகாவில் உச்சகட்ட பரபரப்பு!
Apr 05, 2024, 10:37 PM IST
”ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு தொடர்பாக பாஜக பிரமுகர் சாய் பிரசாத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!”
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக பாரதிய ஜனதா கட்சி தொண்டர் ஒருவருவரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக பாஜக பிரமுகர் சாய் பிரசாத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக ஏசியாநெட் செய்தி தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற ராமேஸ்வரம் ஓட்டலில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடித்ததில் 10 பேர் வரை காயமடைந்தனர்.
என்ன விசாரணையில் தெரியவந்தது?
தீர்த்தஹள்ளி மற்றும் சிக்கமகளூருவில் உள்ள சந்தேக நபர்களுடன் பாஜக பிரமுகர் சாய் பிரசாத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு தீர்த்தஹள்ளியில் உள்ள இரண்டு இளைஞர்கள் மற்றும் மொபைல் கடை உரிமையாளரின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தியது.
அந்த அறிக்கையின்படி, விசாரணையில் சாய் பிரசாத் இந்த நபர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணைக்காக அவரை கைது செய்ய தூண்டியது. சிக்கமகளூருவில் உள்ள போலீஸ்காரர் ஒருவர், முக்கிய சதிகாரனின் தாயாருக்கு வாடகை வீட்டைப் பாதுகாப்பதில் உதவி செய்ததும் தெரியவந்தது.
பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் முஸம்மில் ஷரீப், "கலாசாவைச் சேர்ந்தவர், இன்ஸ்பெக்டரின் உதவியுடன் தனது தாயை சிக்கமகளூருக்கு இடமாற்றம் செய்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய சதிகாரரான ஷரீப், மூன்று மாநிலங்களில் பல இடங்களில் நடந்த பாரிய சோதனைகளைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு முகமையால் கைது செய்யப்பட்டார் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 மற்றும் உத்தரபிரதேசத்தில் ஒன்று உட்பட 18 இடங்களில் என்ஐஏ குழுக்கள் நடவடிக்கை எடுத்ததால் அவர் ஒரு கூட்டு சதிகாரராக கைது செய்யப்பட்டார்.
ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு வழக்கில் மற்ற குற்றவாளிகள்
இந்த வழக்கை மார்ச் 3ஆம் தேதி கைப்பற்றிய என்ஐஏ, குண்டுவெடிப்பை நடத்திய முக்கிய குற்றவாளியான முசாவிர் ஷசீப் ஹுசைனை முன்னதாகவே அடையாளம் காட்டியது. மற்ற வழக்குகளிலும் ஏஜென்சியால் தேடப்படும் மற்றொரு சதிகாரரான அப்துல் மதின் தாஹாவையும் இது அடையாளம் கண்டுள்ளது.
மார்ச் 1-ம் தேதி பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள ஐடிபிஎல் சாலையில் உள்ள கஃபேயில் ஐஇடி வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவருக்கு முஸம்மில் ஷரீப் தளவாட ஆதரவை வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய இரண்டு தேடப்படும் குற்றவாளிகளான அப்துல் மதீன் அகமது தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகியோருக்கு எதிராக தலா ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை தேசிய பாதுகாப்பு முகமை கடந்த மாதம் அறிவித்தது .
"குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் எந்தத் தகவலையும் வழங்குபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்" எனத் தெரிவித்தது. மேலும் தகவல் அளிப்பவர் யார் என்பது ரகசியமாக வைக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கு அரசியல் கவனம் பெற்றதாக மாறி உள்ளது.