தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mamata Banerjee: மொத்தம் நான்கு தையல்கள்..! வீடு திரும்பிய மம்தா - தொடர் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை

Mamata Banerjee: மொத்தம் நான்கு தையல்கள்..! வீடு திரும்பிய மம்தா - தொடர் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை

Mar 15, 2024, 07:28 AM IST

google News
நெற்றியில் காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். (Saikat Paul)
நெற்றியில் காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

நெற்றியில் காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் கீழே விழுந்ததில் மம்தாவுக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில் காயங்களுடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு இருந்தது.

இதையடுத்து நெற்றியில் மூன்று தையல் மற்றும் மூக்கில் ஒரு தையல் போடப்பட்டது. அவருக்கு நரம்பியல், இருதயவியல் மற்றும் பொது மருத்துவ துறையின் தலைமை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஈசிஜி மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைந்தனர். ஆனால், வீடு செல்வதாக அவர் தெரிவித்தார்.

"மம்தா தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் எனவும், மருத்துவ நிபுணர்கள் தரும் ஆலோசனையின்படி அவருக்கு மேல் சிகிச்சை வழங்கப்படும்" என எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை இயக்குநர் மணிமோய் பந்தோபாத்யாய் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் டுவிட்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்து குறித்து தகவல் அறிந்தபின், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவர் விரைவில் குணமாக வேண்டி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடையைவும், நல்ல உடல் நலம் பெறவும் பிரார்த்திக்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், " மேற்கு வங்க முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கும் விபத்து குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியும், மிகுந்த கவலையும் அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய விரும்புகிறேன்" என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

இதேபோல் நாடு முழுவதும் அரசிய கட்சி தலைவர்கள் பலரும் மம்தா விரைவில் குணமடைய வேண்டும் என தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில் மம்தா

மம்தாவுக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் நெற்றியில் ரத்தம் வழியும் புகைப்படம் திரிணாமூல் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டது. அக்கட்சி தலைவர் அபிஷேக் பானர்ஜி மம்தாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மம்தாவுக்கு விபத்து நிகழ்ந்திருப்பது குறித்து கேள்விப்பட்டு அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை வாளாகத்தில் கட்சி தொண்டர்கள் கூடினர். பின்னர் இரவிலேயே சிகிச்சை முடிந்து மம்தா நலமுடன் வீடு திரும்பிய நிலையில் கட்சியினரும் கலைந்தனர்.

மம்தாவை தள்ளிவிட்டதாக பரவிய தகவல்

முதலில் மம்தா கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்ட நிலையில், அவரை யாரோ தள்ளிவிட்டதாக தகவல்கள் பரவின.

ஆனால் உண்மையில் மம்தாவை யாரும் தள்ளவில்லை எனவும், அவருக்கு ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டு கீழே விழுந்ததாகவும் திரிணாமூல் கட்சி சார்பில் தெளிவுடுத்தப்பட்டுள்ளது.

"உண்மையில் மம்தாவை யாரும் பின்னால் இருந்து தள்ளவில்லை. மாறாக, அந்த நேரத்தில் ஏதோ ஒரு சக்தி தன்னை பின்னால் இருந்து தள்ளிவிட்டதாக உணர்ந்த நிலையில், அவர் கீழே விழுந்து நெற்றியில் காயம் ஏற்பட்டது" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாலிகஞ்சில் மறைந்த சுப்ரதா முகர்ஜியின் சிலையை திறப்பு நிகழ்ச்சிக்கு மம்தா சென்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் மம்தா வீடு திரும்பினார். அப்போது தான் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews  

https://www.facebook.com/HTTamilNews 

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி