Libya Floods: லிபியா வெள்ளப்பெருக்கில் சிக்க 5 ஆயிரம் பேர் பலி! பத்தாயிரம் பேரை காணவில்லை என தகவல்
Sep 13, 2023, 08:26 AM IST
லிபியாவில் கடற்கரை நகரமான கனமழை காரணமாக இரண்டு அணைகள் உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர்பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லிபியா நாட்டில் கடற்கரை நகரமான டெர்னாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியதுடன், அருகில் உள்ள பகுதிகளிலும் வெள்ள நீரால் சூழப்பட்டன.
இதையடுத்து தொடர் மழை காரணமாக டெர்னா பகுதியில் அமைந்திருந்த இரண்டு அணைகளில் உடைப்பு ஏற்பட்ட தண்ணீர் வெளியேறிதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைதத்தொடர்ந்து சுனாமி போன்ற ஏற்பட்ட வெள்ள நீரில் சிக்க இதுவரை 5 ஆயரித்து 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெள்ள நீரில் சிக்கியவர்கள், கடலுக்குள் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், அவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் அந்நாட்டின் தேசிய மீட்பு குழு ஈடுபட்டுள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதுவரை 1,500க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
லிபியாவின் கிழக்கு பகுதி கடற்கரை பகுதியில் உருவான டேனியல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு டெர்னா பகுதியை கடுமையாக தாக்கியது. இதில் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை கடுமையான சத்ததுடன் உடைந்த நிலையில், வெள்ள நீர் சீற்றத்துடன் டெர்னா நகரில் நுழைந்தது. அணை உடைப்பு காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் அடித்து செல்லப்பட்டுள்ளன.
சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் வசித்து வந்த நகரின் 25 சதவீதம் பகுதி வெள்ளி பாதிப்பால் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்