தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Five Terrorists: குல்காம் என்கவுன்ட்டர்: காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் பலி

Five Terrorists: குல்காம் என்கவுன்ட்டர்: காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் பலி

Marimuthu M HT Tamil

Jan 06, 2024, 04:29 PM IST

google News
ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையின் கூற்றுப்படி, குல்காம் மாவட்டத்தின் டிஹெச் போரா பகுதியின் சாம்னோ பாக்கெட்டில் வியாழக்கிழமை பிற்பகல் என்கவுன்ட்டர் வெடித்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையின் கூற்றுப்படி, குல்காம் மாவட்டத்தின் டிஹெச் போரா பகுதியின் சாம்னோ பாக்கெட்டில் வியாழக்கிழமை பிற்பகல் என்கவுன்ட்டர் வெடித்தது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையின் கூற்றுப்படி, குல்காம் மாவட்டத்தின் டிஹெச் போரா பகுதியின் சாம்னோ பாக்கெட்டில் வியாழக்கிழமை பிற்பகல் என்கவுன்ட்டர் வெடித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது எனவும், கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையின் கருத்துப்படி, ’’ குல்காம் மாவட்டத்தின் டிஹெச் போரா பகுதியின் சாம்னோ பாக்கெட்டில் நேற்று(நவம்பர் 16) பிற்பகல் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது.

நவம்பர் 16 முதல் நடைபெற்ற  மோதல் இரண்டாவது நாளை எட்டியுள்ளது. அதில் குல்காம் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகிய பாதுகாப்புப் படையினரால் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இறுதிகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று காஷ்மீர் மண்டல காவல்துறை Xபதிவில் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, எல்லைக்கு அப்பால் இருந்து பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸார் உறுதிப்படுத்தினர்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையில் ராணுவத்தின் 34 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் படையினர், 9 உயர் சிறப்புப் படை பிரிவினர், சிஆர்பிஎஃப் ஆகியோர் கலந்துகொண்டனர். இரவு நேரத்தில் சாம்னோ பாக்கெட்டில் சுற்றி வளைக்கப்பட்டு, என்கவுன்ட்டர் நடந்தது. 

பயங்கரவாதிகள் சிக்கியிருந்த பகுதியைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் இறுக்கமான சுற்றிவளைப்பைப் பராமரித்து வந்த நிலையில், இரவோடு இரவாக நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குல்காமின் நெஹாமா பகுதியில் உள்ள சாம்னோவில் இரவு நேர அமைதிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அதிகாரிகள் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தனர். இன்று காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீடு தீப்பிடித்து எரிந்ததால், பயங்கரவாதிகள் வெளியே வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

செப்டம்பர் 13ஆம் தேதி அனந்த்நாக் கரோல் காடுகளில் நடந்த ஒரு வார கால நடவடிக்கையில் நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

முன்னதாக, நவம்பர் 15, புதன்கிழமை அன்று உரி செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்தது.

ராணுவமும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் இணைந்து 'ஆபரேஷன் காளி' என்ற கூட்டு நடவடிக்கையின் போது ஊடுருவல்காரர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி அழித்தது. இது அதே பகுதியில் இரண்டாவது ஊடுருவல் முயற்சியாகும்.

கொல்லப்பட்ட இரு ஊடுருவல்காரர்களில், பாகிஸ்தான் பயங்கரவாதியின் பெயர் கோக் பஷீர் அகமது மாலிக் என்று ராணுவம் கூறியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி