Cauvery Issue: கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் .. தமிழர்களின் நிலைமை என்ன?
Sep 23, 2023, 02:44 PM IST
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 18 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிரப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து முறையிட்டது. கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் ஆகிய இடங்களில் நேற்று விவசாயிகள் போராட்டம் நடத்தி இருந்த நிலையில், இன்று மண்டியா மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த முழு அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் சாலையில் படுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாண்டியா உட்பட கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்துள்ளது
இந்தப் போராட்டத்தின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோருக்கு எதிராகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். தமிழகத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தவும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
இதனிடையே, பெங்களுருவில் பாஜகவினரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வரும் காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்