Prajwal Revanna: 'விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன்'-பெங்களூர் வந்த பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தது போலீஸ்
May 31, 2024, 12:15 PM IST
ஜெர்மனியிலிருந்து பெங்களூர் வந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் பிரஜ்வல் கூறினார்.
இந்தியாவுக்கு வந்த பின்னர் தனது முதல் பதிலில், பிரஜ்வல் ரேவண்ணா, சட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறினார். அவரை போலீஸார் கைது செய்தனர்.
பிரஜ்வாலை காவலில் எடுத்த பின்னர் அவரது வழக்கறிஞர் அருண் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரஜ்வால் கூறியபடியே அவர் மீண்டும் பெங்களூருக்கு வந்துவிட்டார். அவர் சட்டத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளார். விசாரணையின் போது சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளுடன் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் அவர் கூறினார். குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் ஊடக விசாரணை செய்ய வேண்டாம் என்றும் அவர் ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டார்” என்றார்.
இதற்கிடையே, கடத்தல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயார் பவானி ரேவண்ணாவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜூன் 1 ஆம் தேதி ஹோலேநரசிபுரா வீட்டில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பவானியை எஸ்ஐடி கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, ஆபாச வீடியோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹாசன் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவின் தாயார் பவானி ரேவண்ணா, கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பவானி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவரது கணவர் எச்.டி.ரேவண்ணா கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
பிரஜ்வல் ரேவண்ணா இருந்ததாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான பாலியல் வீடியோக்களை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
முன்னதாக, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹாசன் தொகுதி எம்.பியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
கர்நாடகாவை உலுக்கிய பாலியல் வீடியோ
தன் வீட்டில் வேலை செய்யும் பெண்கள் உட்பட பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஹாசன் தொகுதி எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார்கள் எழுந்ததுடன், அது தொடர்பான வீடியோக்களும் பரவியது.
பெண்களை பாலியல் ரீதியாக துன்புருத்திய புகார்கள் தொடர்பாக அவர் மீது மூன்று காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்ட வீடியோ
அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நிலையில், நேற்று முன் தினம் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, நாட்டை விட்டு வெளியேறி சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, வரும் மே 31 ஆம் தேதி தனக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராகப் போவதாகக் கூறி இருந்தார்.
தாய், தந்தை, தாத்தாவிடம் மன்னிப்புக் கோரினார்
அந்த வீடியோவில் “ முதலில் தாய், தந்தை, தாத்தாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் இருக்கும் இடத்தை தெளிவுபடுத்தவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன். லோக்சபா தேர்தல் முடிந்ததும், பல்வேறு காரணங்களுக்காக என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எஸ்ஐடி அமைக்கப்பட்டது. எனது வெளிநாட்டுப் பயணத்திற்கும் இந்த வழக்குகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம். எஸ்ஐடி எனக்கு நோட்டீஸ் கொடுத்து அதற்கு என் வழக்கறிஞர் மூலம் பதில் அளித்ததை மட்டுமே நான் அறிந்தேன்.
டாபிக்ஸ்