Hamas Warns: ‘இஸ்ரேலுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்’-ஹமாஸ் அதிகாரி எச்சரிக்கை
Nov 02, 2023, 06:02 PM IST
"இஸ்ரேலுக்கு எங்கள் நிலத்தில் இடமில்லை" என்று ஹமாஸ் போராளிக் குழுவின் முடிவெடுக்கும் அரசியல் பணியகத்தின் உறுப்பினர் காசி ஹமாத் கூறினார்.
ஹமாஸ் அமைப்பு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை அந்நாடு அழிக்கப்படும் வரை "மீண்டும் மீண்டும்" தொடரும் என்று எச்சரித்தார். இஸ்ரேலுக்கு "எங்கள் நிலத்தில் இடமில்லை" என்று அவர் தெளிப்பட தெரிவித்தார்.
போராளிக் குழுவின் முடிவெடுக்கும் அரசியல் பணியகத்தின் உறுப்பினரான காசி ஹமாத், அக்டோபர் 23 லெபனான் தொலைக்காட்சி நேர்காணலின் போது எச்சரிக்கை விடுத்தார். அக்டோபர் 7 ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலை, ஆபரேஷன் அல்-அக்ஸா ஃபளட் என்று ஹமாஸ் குறிப்பிடுவார்கள் என்று அவர் கூறினார்.
"அல்-அக்ஸா ஃப்ளட் முதல் முறையாகும், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது முறை இருக்கும், ஏனென்றால் எங்களிடம் உறுதியும், போராடும் திறன்களும் உள்ளன," என்று ஹமாத் கூறினார், ஹமாஸ் "எந்த விலையும் கொடுக்கத் தயாராக உள்ளது." என்றும் அவர் கூறினார்.
"நாங்கள் தியாகிகளின் தேசம் என்று அழைக்கப்படுகிறோம், தியாகிகளை தியாகம் செய்வதில் பெருமை கொள்கிறோம்" என்று ஹமாத் மேலும் கூறினார். “இஸ்ரேலுக்கு எங்கள் நிலத்தில் இடமில்லை. அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு பாதுகாப்பு, இராணுவம் மற்றும் அரசியல் பேரழிவை ஏற்படுத்துவதால் அந்த நாட்டை நாம் அகற்ற வேண்டும், மேலும் அது முடிக்கப்பட வேண்டும்" என்றார்.
இஸ்ரேலுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்
ஹமாத் மேலும் கூறுகையில், “இதை முழு பலத்துடன் கூற நாங்கள் வெட்கப்படவில்லை. நாங்கள் இஸ்ரேலுக்கு பாடம் கற்பிக்க வேண்டும், இதை மீண்டும் மீண்டும் செய்வோம். இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் நியாயமானது என்று வலியுறுத்திய ஹமாத், "இஸ்ரேலின் இருப்புதான் அந்த வலி, இரத்தம் மற்றும் கண்ணீர் அனைத்தையும் ஏற்படுத்துகிறது" என்று தொடர்ந்தார்.
“இது இஸ்ரேல், நாங்கள் அல்ல. நாங்கள் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே, நாங்கள் செய்யும் செயல்களுக்கு யாரும் நம்மைக் குறை கூறக்கூடாது. அக்டோபர் 7, அக்டோபர் 10 தேதிகளில் நாங்கள் செய்த அனைத்தும் நியாயமானது," என்று அவர் கூறினார்.
முன்னதாக, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு புதன் கிழமை காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய குண்டுவீச்சில் மூன்று வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உட்பட ஏழு பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனத்தை தளமாகக் கொண்ட ஹமாஸ் போராளிகள் கூறியுள்ள நிலையில், ‘வலி இருப்பினும், வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும்’ என உறுதிப்படி அறிவித்தார்.