தலையில் துப்பாக்கி குண்டு, கை விரல் துண்டிப்பு..ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?
Oct 19, 2024, 11:59 AM IST
ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார், இஸ்ரேலிய தரைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். தலையில் இதில் யாஹ்யா சின்வாரின் பிரேதப் பரிசோதனையில் துப்பாக்கிச் சூடு, விரல் வெட்டப்பட்டு இருப்பது காட்டப்படுகிறது.
ஹமாஸின் தலைவரான 61 வயதான யாஹ்யா சின்வார், தலையில் துப்பாக்கிச் சூடு காயத்தால் கொல்லப்பட்டார். இது கடுமையான ரத்தப்போக்கை ஏற்படுத்தியிருக்க கூடும் என கூறப்பட்டுள்ளது.
ஹமாஸ் தலைவரின் இறப்பு தற்போது நடந்து வரும் மோதலில் மாற்றத்தைக் ஏற்படுத்தலாம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
ஹமாஸ் தலைவர் பிரேத பரிசோதனை அறிக்கை
இவரது பிரேத பரிசோதனையை மேற்பார்வையிட்ட மருத்துவர் மேற்கோள் காட்டியிருக்கும் அறிக்கையின்படி, "இந்த வார தொடக்கத்தில் தெற்கு காசாவில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய உளவுத்துறை அடிப்படையிலான தரைவழித் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் தரைப்படைகளின் (IDF) 828 பிரிகேட் நடத்திய சோதனையில், தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் சின்வார் இறந்தார் என்று இஸ்ரேல் நாட்டின் தேசிய தடயவியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சென் குகேல் தெரிவித்தார்.
சின்வாரின் பிரேதப் பரிசோதனை, அவர் இறந்த 24 முதல் 36 மணிநேரங்களுக்குப் பிறகு, சிறிய ஏவுகணை அல்லது தொட்டி ஷெல்லில் இருந்து துண்டாக்கப்பட்ட முன்கை உட்பட கடுமையான காயங்களை வெளிப்படுத்தியது.
ஹமாஸ் தலைவர் மின்சார கம்பியைப் பயன்படுத்தி ரத்தப்போக்கை நிறுத்த முயன்று இருக்ககூடும். ஆனால் அது பலனளிக்கவில்லை" என கூறப்பட்டுள்ளது.
டாக்டர் குகெல் சிஎன்என் ஊடகத்திடம் கூறியதாவது, "ஹமாஸ் தலைவரின் விரலைத் துண்டித்த இஸ்ரேலியப் படையினர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துண்டிக்கப்பட்ட விரலில் ஒன்று டிஎன்ஏ சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது, இது சின்வார் 1991 முதல் 2011 வரை இஸ்ரேலில் சிறையில் இருந்த விவரத்துடன் ஒத்துப்போகிறது. சமூக ஊடகங்களில் பரவும் விடியோக்கள் சின்வாரின் உடலுக்கு அருகில் இஸ்ரேலிய வீரர்கள் இருப்பதைக் காட்டுகிறது.
யாஹ்யா சின்வாரின் மரணத்தால் ஏற்படும் விளைவுகள்
தற்போது சின்வாரின் மரணம், ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே உட்பட பல உயர்மட்ட தலைவர்களை இழந்திருப்பது ஹமாஸுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடியாக உள்ளது.
சின்வாரின் மரணம் காஸாவில் பிணைக் கைதிகள் திரும்புவதற்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் நம்புகிறது. எவ்வாறாயினும், காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் வெளியேறும் வரை மற்றும் மோதல் முடிவுக்கு வரும் வரை பணயக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று சின்வாரின் துணைத் தலைவர் கலீல் அல்-ஹய்யா தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் புதிய தலைவர்
ஹமாஸ் காசாவுக்கு வெளியே ஒரு புதிய அரசியல் தலைவரைத் தேடுகிறது. அதே சமயம் சின்வாரின் சகோதரர் முகமது இஸ்ரேலுக்கு எதிரான போரை வழிநடத்துவதில் முக்கியப் பங்கை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான ஷூரா கவுன்சில், வீழ்ந்த தலைவர்களை விரைவாக மாற்றியமைக்கும் அமைப்பின் வரலாற்றைத் தொடர்ந்து, புதிய தலைவரை நியமிக்கும் என தெரிகிறது.
சின்வார் கொல்லப்பட்டதற்கு பாராட்டுகளை தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது மரணம் தற்போது நடந்து வரும் மோதலின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம் என்று கூறினார்.
இஸ்ரோல் ராணுவ அமைச்சர் யோவ் கேலண்ட் இந்த கொலையை அடுத்து, ஒவ்வொரு பயங்கரவாதியையும் பின்தொடர்ந்து அவர்களை ஒழித்துவிடும் என்றும் இன்னும் காஸாவில் இருக்கும் பணயக்கைதிகளை திரும்ப கொண்டு வரும் என்றும் கூறினார்.
டாபிக்ஸ்