தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Gujarat Election 2022: 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

Gujarat election 2022: 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

Karthikeyan S HT Tamil

Nov 14, 2022, 06:30 PM IST

google News
குஜராத் தேர்தல், இறந்த பெண்களின் உடல்களை வீடியோவாக எடுத்த ஊழியர் தலைமறைவு உள்பட மேலும் முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
குஜராத் தேர்தல், இறந்த பெண்களின் உடல்களை வீடியோவாக எடுத்த ஊழியர் தலைமறைவு உள்பட மேலும் முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

குஜராத் தேர்தல், இறந்த பெண்களின் உடல்களை வீடியோவாக எடுத்த ஊழியர் தலைமறைவு உள்பட மேலும் முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

17-வது ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேசியாவின் பாலி நகருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை 35 துண்டுகளாக வெட்டி, 18 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் உடல் பாகங்களை தில்லி முழுவதும் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

2022 ஆம் ஆண்டுக்கான கூகுள் டூடுல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான விருதை கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்லோக் முகர்ஜி வென்றுள்ளார்.

டிசம்பர் 7 முதல் 29-ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநிலத்துக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும், இதனால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

சர்ச்சைக்குரிய ராமஜென்பூமியில் புதிய மசூதி கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஒதுக்கித்தந்த இடத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அயோத்தியில் மசூதி கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உருவ கேலிக்கு எதிராக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அதனை பாடமாக சேர்ப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இரு இளைஞர்கள் சேர்ந்து நாயை தூக்கிலிட்டு கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கர்நாடக மாநிலத்தில் இறந்த பெண்களின் உடல்களை நிர்வாணமாகப் படம் மற்றும் வீடியோ எடுத்த பிணவறை ஊழியர் சையத் ஹூசைனை போலீசார் தேடி வருகின்றனர்.

பாஜகவுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று புதுச்சேரியில் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.

ஜாம்நகர் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கும் தனது மனைவிக்கு வாக்களிக்குமாறு அத்தொகுதி மக்களிடம் பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆதரவு கோரியுள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் முன்னெச்சரிக்கை பணிக்காக 2 தேசிய பேரிடர் மீட்புப்படை அரக்கோணத்தில் இருந்து விரைந்ததுள்ளது.

கட்டாய மதமாற்றத்தால் நாட்டின் பாதுகாப்புக்கும் மத சுதந்திரத்திற்கும் ஆபத்து ஏற்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மன்ஹர் படேல் உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முலாயம் சிங் யாதவின் மெயின்புரி மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன்-சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று நடைபெறுகிறது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தை சிரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் திட்டமிட்டு நிகழ்த்தியதாக அந்நாட்டு உளவுத் துறை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் விமான நிலையத்தில் கடந்த 18 ஆண்டுகளாக தங்கி இருந்த ஈரானின் மெஹ்ரான் கரீமி நஸ்செரி மரணமடைந்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி