முதல்முறையாக ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் போனஸ்: 12 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் சம்பள ஊக்கத்தொகை!
Oct 05, 2024, 10:22 AM IST
முதல்முறையாக ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் போனஸ் அதாவது 12 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் சம்பள ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுமார் 12 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு முதல் முறையாக ஏழாவது ஊதியக் குழுவைப் பயன்படுத்தி 78 நாட்கள் சம்பளம் ஊதிய ஊக்கத்தொகையாக கிடைக்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வே துறை நிறுவனம் ஆகும். இதனை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து செயலாற்றி வருகிறது.
இந்நிலையில் ரயில்வே துறை நிறுவனம் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, அரசு இதழில் பதிவுபெறாத ரயில்வே ஊழியர்கள் (Non-Gazetted Railway Employees) உடைய, ’சிறந்த செயல்திறனை’ அங்கீகரிக்கும் வகையில் உற்பத்தித் திறன் இணைக்கப்பட்ட போனஸை பெறுவார்கள் என மத்திய அரசு கூறியுள்ளது.
தகுதியான ரயில்வே ஊழியர்கள் இந்த ஆண்டு PLB என்னும் செயல் திறன் போனஸ் மூலம் எவ்வளவு பெறுவார்கள்?
ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்த பணியாற்றும் ரயில்வே ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகையாக, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு 78 நாட்கள் மதிப்புள்ள ஊதியம் மொத்தம் ரூ.2,028.57 கோடி வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ஒரு தகுதியான ரயில்வே ஊழியர் அவர்களின் சம்பளத்தைப் பொறுத்து அதிகபட்சமாக 17,951 ரூபாயைப் பெறலாம் என்று கூறுகிறேன்.
இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பின் (ஐ.ஆர்.இ.எஃப்) தேசிய பொதுச் செயலாளர் சர்வ்ஜீத் சிங் கடந்த மாதம் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு ஆறாவது ஊதியக் குழுவின் அடிப்படையில், ’சிறந்த செயல்திறனை’ அங்கீகரிக்கும் வகையில் உற்பத்தித் திறனைக் கணக்கிடுவதில் இருந்து ஏழாவது ஊதியக் குழுவிற்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தது. அதையடுத்து, இந்த ஆண்டு சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் போனஸ், ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.
ஆறாவது சம்பள கமிஷனில் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000 ஆகவும், ஏழாவது சம்பளக் குழுவில் ரூ.18,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு 2016ஆம் ஆண்டு முதல் ஏழாவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டாலும், கடந்த ஆண்டு வரை ஆறாவது ஊதியக் குழுவைப் பயன்படுத்தி செயல்திறன் போனஸ் கணக்கிடப்பட்டது.
இந்த ஆண்டு செயல்திறன் போனஸுக்கு எந்த ரயில்வே ஊழியர்கள் தகுதியானவர்கள்?
டிராக் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்கள், ரயில் மேலாளர்கள் மற்றும் ரயில்வே காவலர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்மேன், ரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் பிற குழு சி ஊழியர்கள் போன்ற தகுதியான ஊழியர்கள் இந்த செயல்திறன் போனஸுக்கு உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை / தசரா விடுமுறைக்கு முன்னர் தகுதியான ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது.
இந்திய ரயில்வேயின் செயல்திறன் எவ்வாறு வளர்ந்தது?
மத்திய அரசாங்கத்தால் கணக்கிடப்பட்ட பதிவின் காரணமாக உள்கட்டமைப்பில் மேம்பாடு, செயல்பாடுகளில் செயல்திறன் மற்றும் சிறந்த தொழில்நுட்பம் உள்ளிட்டப் பல காரணிகள் செயல்திறனுக்கு பங்களித்தன என்று மத்திய அரசாங்கம் கூறுகிறது.
ரயில்வே ஊழியர்கள் 1,588 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச்சென்றுள்ளது. மேலும், கிட்டத்தட்ட 6.7 பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றது.
கடந்த ஆண்டு அக்டோபரில், ரயில்வே ஊழியர்கள் மொத்தம் ரூ.1,968.87 கோடி மதிப்புள்ள செயல்திறன் போனஸை பெற்றுள்ளனர்.
அதேபோல் ரயில்வே ஊழியர்கள் 1,509 மில்லியன் டன் சரக்குகளை பதிவு செய்து கிட்டத்தட்ட 6.5 பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
டாபிக்ஸ்