தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Online Scam: "30 விநாடியில் பணத்தை செலுத்தாவிட்டால்..!" கடன் பெற்ற பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த லோன் செயலி

Online Scam: "30 விநாடியில் பணத்தை செலுத்தாவிட்டால்..!" கடன் பெற்ற பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த லோன் செயலி

Apr 10, 2024, 08:22 PM IST

google News
கடனைத் திரும்பப் பெறுவதற்காக கடன் பெற்றவரின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாணப் புகைப்படங்களை பரப்பிய Everloan செயலியின் ஆபரேட்டர்கள் மீது மும்பை காவல்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடனைத் திரும்பப் பெறுவதற்காக கடன் பெற்றவரின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாணப் புகைப்படங்களை பரப்பிய Everloan செயலியின் ஆபரேட்டர்கள் மீது மும்பை காவல்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடனைத் திரும்பப் பெறுவதற்காக கடன் பெற்றவரின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாணப் புகைப்படங்களை பரப்பிய Everloan செயலியின் ஆபரேட்டர்கள் மீது மும்பை காவல்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பண தேவையில் இருப்பவர்களை கடன் என்ற வலையில் சிக்க வைத்து, இறையாக்கும் ஆன்லைன் லோன், டிஜிட்டல் லோன் நிறுவனங்களின் பிடியில் மும்பை சேர்ந்த பியூட்டிசியன் பெண் ஒருவர் சிக்கியுள்ளார். கடனாக பெற்ற அந்த பெண்ணின் நிர்வான புகைப்படங்களை மார்பிங் செய்து இணையத்தில் பகிர்ந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Everloan என்ற செயலி மூலம் பாதிக்கப்பட்ட பெண் ரூ. 10 ஆயிரம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமூக வலைத்தளத்தில் பிரவுசிங் செய்தபோது தனது நிர்வாண புகைப்படம் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பணத்தேவை உள்ளவர்களுக்கு கடனாக அளிக்கும் லோன் செயலிகள், தங்களிடம் அணுகுபவர்களின் புகைப்படம், இதர ஆவணங்கள், டிஜிட்டல் மற்றும் மொபைல் அணுகலை வழங்க சம்மதம் பெறுகின்றன. அத்துடன் அவர்கள் வாங்கும் கடனை வட்டியுடன் கட்டுவதற்கு ஒப்புக்கொண்ட பிறகே அவர்களுக்கு பணமும் அளிக்கப்படுகிறது.

இதையடுத்து பணத்தை குறிப்பிட்ட தேதியில் செலுத்த தவறியவர்களின் தனிப்பட்ட தகவல்களை எடுத்து இவ்வாறாக தவறான முறையில் பயன்படுத்தும் போக்கை சில நிறுவனங்கள் கையாளுகின்றன.

மும்பை ப்யூட்டிசனுக்கு நேர்ந்த கொடுமை

கடந்த 7ஆம் தேதி லோன் பெற்ற தொகையை திருப்பி செலுத்துமாறு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போன் கால் வந்துள்ளது. 30 விநாடிக்குள் கடனாக பெற்ற பணத்தை செலுத்தாவிட்டால், அவரது நிர்வாண புகைப்படங்களை தொடர்பில் இருப்பவர்களுக்கு பகிரப்படும் என லோன் செயலி நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.

இதன்பின்னர் கடன் பெற்ற பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படத்தை அந்த பெண்ணுக்கும், அவரது தொடரில் இருக்கும் சிலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் விரைவில் நிர்வாண விடியோவும் பகிரப்படும் என மெசேஜ் அனுப்பப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்மணி , க்யூஆர் கோட் மூலம் உடனடியாக பணத்தை செலுத்தியுள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு

இதுதொடர்பாக மும்பை எல்டி மார்க் போலீசாரிடம் சம்மந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் 384 (பணம் பறித்தல்), 419 (தனிப்பட்ட முறையில் ஏமாற்றுதல்) மற்றும் 420 (ஏமாற்றுதல்), 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சைபர் காவல்துறையின் கூடுதல் காவல்துறை துணை ஆணையர் தத்தா நலவாடே, "இதுபோன்ற கடன் செயலிகள் கடனாளிகளிடமிருந்து தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு எந்த அளவுக்கும் இழிவான செயல்களில் ஈடுபடும். சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கு கூட முயன்றனர். எந்தவொரு விஷயமும் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தாலும், அதில் இருக்கும் மறைமுக சிக்கல்கள் குறித்தும் கவனமாக பொதுமக்கள் இருக்க வேண்டும்" என்றார்.

ஆன்லைனில் இருக்கும் பெரும்பாலான இன்ஸ்டன்ஸ் லோன் செயலிகள் சீனாவில் பதிவு செய்யப்பட்டதாகவே உள்ளது. தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் Everloan செயலி லண்டனில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற சந்தேகத்துக்குரிய செயலிகளை நீக்குவதற்கு கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுடன் போலீசார் எப்போதும் தொடர்பில் இருந்து வருகின்ற போதிலும், இந்த நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்களில் தங்களது திருவிளையாடல்களை நிகழ்த்தி வருவது தொடர்கதையாகவே உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி