Tamil Live News Updates: கனல் கண்ணனுக்கு எதிராக 2 பிரிவுகளில் வழக்கு
Jul 11, 2023, 05:29 PM IST
இன்றைய (10.07.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்
இமாச்சல் இயற்கை பேரிடர்-ராகுல் ட்வீட்
இமாச்சலப் பிரதேசத்தில் இந்த இயற்கை பேரிடரின் கடினமான சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கனல் கண்ணனுக்கு எதிராக 2 பிரிவுகளில் வழக்கு
சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட புகாரில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை நாகர்கோவிலில் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவதும் பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆளுநர் ரவி உணர்ந்து கொள்ள வேண்டிய பாடம்-வீரமணி அறிக்கை
“மக்கள் அதிகாரம் பொங்கி எழுந்தால், தான்தோன்றித்தனம் அதன் முன் காணாமற்போகும் என்பதே ஆளுநர் ரவி உணர்ந்துகொள்ள வேண்டிய பாடம்” என தி.க தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டார்.
‘நிர்வாணமாக நடிக்க மாட்டேன்’-பாலிவுட் நடிகை
எந்தவொரு படத்திலும் நிர்வாணமாக நடிக்க மாட்டேன் என பிரபல பாலிவுட் நடிகை நர்கீஸ் ஃபக்ரி தெரிவித்தார்.
'தமிழகம் துணை நிற்கும்'
இமாச்சல பிரதேச சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாடு துணை நிற்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் வன்முறை
மணிப்பூரின் இம்பால் மேற்கு மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் அமைந்துள்ள இரண்டு கிராமங்களில் திங்கள்கிழமை நடந்த வன்முறை மோதல்களில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இருவர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு சந்திப்பு
நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக டெல்லி சென்ற தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
மாணவர் சேர்க்கை அறிவிப்பு
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
55 ரவுடிகள் கைது
சென்னை ஆவடியில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனை வேட்டையில் 55 ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நாளை ஆலோசனை!
நடிகர் விஜய் நாளை தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்
புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 மானியத்தில் வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டை தாரர்களுக்கு சிலிண்டருக்கு ரூ.150 மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என காவல்துறை விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்.
பேனா சின்னத்தை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்து மதத்தில் இருந்து வெளியேறுவோம்!
மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 15ம் தேதி இந்து மதத்தில் இருந்து வெளியேற உள்ளதாக கோட்டாட்சியர் விசாரணைக்கு ஆஜரான பட்டியலின சமூக மக்கள் தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் மூலம் வருமானம் ஈட்டுவது அரசின் நோக்கம் அல்ல- அமைச்சர் முத்துசாமி
உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பார் வைத்திருக்க முடியும், உரிமம் இன்றி பார் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இன்று கனமழை
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சர்ருக்கு ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆரணியில் 5,000க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். விசைத்தறி பட்டு உற்பத்தியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் நடத்த வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து சிறப்பு முகாம் நடத்த தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது
பாமக நிர்வாகி கொலையை கண்டித்து சாலை மறியல்
செங்கல்பட்டில் பாமக நிர்வாகி கொலையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் செய்து வருகின்றனர்.
கிணற்றில் சிக்கிய தமிழக தொழிலாளி
கேரளாவில் கிணற்றில் சிக்கிய தமிழக தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டது. 50 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மகாராஜாவின் உடலை தீயணைப்புத்துறை மீட்டது
மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வழக்கு - நீதிபதி அதிரடி தீர்ப்பு
வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது தொடர்பாக வழக்கில் நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
ஜவான் டீஸர் ரிலீஸ்
நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.
தந்தை போக்சோவில் கைது
சென்னை: கோடம்பாக்கத்தில் 16 வயது மகளிடம் குடிபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்ட தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மருத்துவர் காலிப் பணியிடங்கள்
'1,021 மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை' எடுக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
காவாலா பாடல் சாதனை
‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் யூடியூபில் 2 கோடி பார்வைகளை கடந்தது உள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 10) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,880, க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ. 5,485க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2 கோடி பார்வைகளை கடந்த ‘காவாலா’ பாடல்!
யூடியூபில் 2 கோடி பார்வைகளை கடந்தது ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல்.
தக்காளி விலையில் மாற்றமில்லை!
சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கோவை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓம் பிரகாஷ் சோனி கைது
சொத்துக்குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சோனி கைது.
பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூரில் திமுக எம்.எல்.ஏ அய்யப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. பின்னர் குண்டு வீசி விட்டு தப்பியோடியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. நல்லாத்துர் பகுதியில் நடந்த குண்டு வீச்சு குறித்து 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
1 கிலோ தக்காளி ரூ80க்கு விற்க நடவடிக்கை
புதுக்கோட்டை உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ80க்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ தக்காளி ₹110க்கு விற்பனையானது
மழையால் தத்தளிக்கும் உத்திரபிரதேசம்
உத்திரபிரதேசத்தில் பெய்த கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 34 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
5 மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவு
மேற்கு வங்க மாநிலத்தில் 697 வாக்குச்சாவடி மையங்களில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலலில் ஏற்பட்ட வன்முறையால் மீண்டும் தேர்தல் நடக்கிறது.
பாமக நகர செயலாளர் கொலை – ஒருவர் சுட்டுப்பிடிப்பு
செங்கல்பட்டு மணிக்கூண்டு பகுதியில் பாமக நகர செயலாளர் நாகராஜன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கே.கே.நகர் பகுதியை சேர்ந்த அஜய் என்பவரை சுட்டுப்பிடித்த போலீஸார். நாகராஜனை கொலை செய்துவிட்டு 6 பேர் கொண்ட கும்பல் தப்பியோடும்போது, அஜய்யை சுட்டுப்பிடித்தனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தலைநகரை புரட்டிப்போட்ட கனமழை
41 ஆண்டுகளில் இல்லாத அளவாக தலைநகர் டெல்லியில் கனமழை கொடித்தீர்த்தது. நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கியது. வீடுகள் இடிந்து விழுந்ததால், நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு ஞாயிறு விடுமுறையை ரத்து செய்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,
17 ரயில்கள் ரத்து - வட இந்திய மழை எதிரொலி
தொடர் மழையால் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் 12 ரயில்கள் மாற்று வழியில் ரயில்களை இயக்குவதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை
சென்னையில் மீண்டும் மழை. புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இமாச்சலில் 6 பேர் உயிரிழப்பு
இமாச்சல் பிரசேத்தில் மழை, வெள்ள பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவால் 765 சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் வீடுகள், சாலைகளில் கார்கள் அடித்துச்செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மழை தொடர்வதால் 2 நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்திய கன மழை அப்டேட்
வட இந்தியாவில் கடும் மழைப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி, நொய்டாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. யமுனா நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.