Kolkata's Eden Gardens: ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுப்பு!
Dec 18, 2023, 11:45 AM IST
மைதான் காவல் நிலையத்தை சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் திங்கள்கிழமை காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மைதானத்தின் கே பிளாக்கில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர் தனஞ்சய் பாரிக் (21) என அடையாளம் காணப்பட்டார், அவர் நகரத்தில் உள்ள அந்த ஸ்டேடியத்தின் ஊழியர் கணேஷ் சந்திர பாரிக் என்பவரின் மகன் ஆவார். ஒடிசாவில் வசிப்பவர் தனஞ்சய்.
காலை 8 மணியளவில் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கொல்கத்தா போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, மைதான் காவல் நிலையத்தை சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.
இச்சம்பவம் குறித்து மைதான காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து, நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கொல்கத்தா போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அனைத்து சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.
ஈடன் கார்டன்ஸ் என்பது கொல்கத்தாவில் உள்ள ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானமாகும். 1864 இல் நிறுவப்பட்டது, இது இந்தியாவின் பழமையான மற்றும் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் உலகின் மூன்றாவது பெரியது. இந்த மைதானம் தற்போது 68,000 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கும் இடவசதி கொண்டது. இது கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பெங்கால் (CAB) க்கு சொந்தமானது. இது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.