தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  கர்நாடக தேர்தல் பரப்புரையிலும் திருவள்ளுவர்! தமிழ்நாட்டை சுட்டிக் காட்டி காங்கிரஸை விளாசும் நட்டா!

கர்நாடக தேர்தல் பரப்புரையிலும் திருவள்ளுவர்! தமிழ்நாட்டை சுட்டிக் காட்டி காங்கிரஸை விளாசும் நட்டா!

Kathiravan V HT Tamil

Apr 19, 2023, 11:48 AM IST

google News
60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த காங்கிரஸ் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது, மாநிலத்தில் மீண்டும் வர முடியாத அளவுக்கு காங்கிரஸ் அடித்தளம் சுருங்கிவிட்டது - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.
60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த காங்கிரஸ் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது, மாநிலத்தில் மீண்டும் வர முடியாத அளவுக்கு காங்கிரஸ் அடித்தளம் சுருங்கிவிட்டது - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.

60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த காங்கிரஸ் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது, மாநிலத்தில் மீண்டும் வர முடியாத அளவுக்கு காங்கிரஸ் அடித்தளம் சுருங்கிவிட்டது - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாளையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடையும் நிலையில் பாஜக - காங்கிரஸ் கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

ஹூப்ளியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக தலைவர் மேலும் கூறுகையில், ஒரு காலத்தில் நாட்டில் பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்ததாகவும், ஆனால் இன்று எங்கும் இல்லை என்றும் கூறினார். 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த காங்கிரஸ் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது, மாநிலத்தில் மீண்டும் வர முடியாத அளவுக்கு காங்கிரஸ் அடித்தளம் சுருங்கிவிட்டது என்றார்.

கேரளாவில், காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், இன்று அதன் தளம் சுருங்கி வலுவிழந்து நிற்கிறது, அதே நேரத்தில், கர்நாடகாவிலும் பூசல் உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கூட, தேசிய கட்சி அங்கீகாரம் பெற்றிருந்தாலும், இரண்டு மாநிலங்களிலும் காணாமல் போய்விட்டது.

ஹூப்ளி பகுதியில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையில் திருவள்ளுவரைப் பற்றியும் அல்லது பெங்களூரு நிறுவனர் நடபிரபு கெம்பேகவுடா அல்லது இந்திய கவிஞர்களைப் பற்றி பேசுகிறார். அவர் கவிஞர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. நிலத்தின் சாராம்சத்தைப் பற்றி பேசுகிறார்.

பத்ம விருதுகளைப் பெறுவதற்காக ராஷ்டிரபதி பவனுக்கு பழங்குடியின உடையில் யாரும் வெறுங்காலுடன் அங்கு சென்றதில்லை என்ற ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியுள்ளார் என்றார். மத்திய பாஜக அரசு, மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (NEET) எழுதுவதற்கு பிராந்திய மொழிகளை அறிமுகப்படுத்தியதன் காரணமாக ஆங்கிலம் தெரியாதவர்களும் தேர்வு செய்யப்பட்டு மருத்துவர்களாகி வருகின்றனர் என்றும் ஜே.நட்டா பேசினார்.

அடுத்த செய்தி