தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World Health Day 2024 : உலக சுகாதார தின வரலாறு, கருப்பொருள், முக்கியத்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!

World Health Day 2024 : உலக சுகாதார தின வரலாறு, கருப்பொருள், முக்கியத்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil

Apr 06, 2024, 11:45 PM IST

google News
World Health Day 2024 : உலக சுகாதார நிறுவனத்தின் அனைவருக்கும் சுகாதாரம் என்பது, குறைந்தபட்சம் 140 நாடுகள் சுகாதாரம் மனித உரிமை என்பதை அறிவுறுத்துகிறது. ஆனால் நாடுகள் இதை சட்டமாக்கவில்லை. அவர்கள் சுகாதார சேவைகளை பெறுவதற்கு பாத்தியப்பட்டவர்கள் என்று உறுதியளிக்கவில்லை.
World Health Day 2024 : உலக சுகாதார நிறுவனத்தின் அனைவருக்கும் சுகாதாரம் என்பது, குறைந்தபட்சம் 140 நாடுகள் சுகாதாரம் மனித உரிமை என்பதை அறிவுறுத்துகிறது. ஆனால் நாடுகள் இதை சட்டமாக்கவில்லை. அவர்கள் சுகாதார சேவைகளை பெறுவதற்கு பாத்தியப்பட்டவர்கள் என்று உறுதியளிக்கவில்லை.

World Health Day 2024 : உலக சுகாதார நிறுவனத்தின் அனைவருக்கும் சுகாதாரம் என்பது, குறைந்தபட்சம் 140 நாடுகள் சுகாதாரம் மனித உரிமை என்பதை அறிவுறுத்துகிறது. ஆனால் நாடுகள் இதை சட்டமாக்கவில்லை. அவர்கள் சுகாதார சேவைகளை பெறுவதற்கு பாத்தியப்பட்டவர்கள் என்று உறுதியளிக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினம் ஏப்ரல் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும். இந்த நாளின் வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

மகிழ்ச்சியான வாழ்வு முதல் நீண்ட ஆயுள் வரை ஆரோக்கியம் வாழ்வின் பல்வேறு சூழல்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நவீன காலத்தில், குறிப்பாக தொற்றுக்குப்பின்னர், நமது ஆரோக்கியம் என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காலம் செல்லச்செல்ல பல நோய்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கிறது.

மன ஆரோக்கிய சவால்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவம் என அனைத்தும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. உலக சுகாதார தினத்தை நாம் கடைபிடிக்கும் வேளையில், இந்த நாளில் இதுகுறித்து நாம் செய்ய வேண்டியவை குறித்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் இந்த நாளை துவங்கியது. 1950ம் ஆண்டு இந்த நாளை சர்வதேச பொது சுகாதாரத்திற்காக ஜநாவின் இந்த சிறப்பு மையம் நிறுவியது. உலகளவில் ஏற்படும் சுகாதார பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். மக்களை ஆரோக்கிய வாழ்வு வாழ ஊக்குவிக்கிறது. 1948ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் நிறுவப்பட்டு, அது முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக சுகாதார தின வரலாறு மற்றும் முக்கியத்துவம்

உலக சுகாதார நிறுவனம் நிறுவிய 11 உலக சுகாதார பிரச்சாரங்களுள் உலக சுகாதார தினமும் ஒன்று. 1948ம் ஆண்டு முதல் சுகாதார கூட்டம் அந்நிறுவனத்தால் நடத்தப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தை நிறுவிய ஏப்ரல் 7ம் தேதியே உலக சுகாதார தினமும் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் பல்வேறு சுகாதார பிரச்னைகள் குறித்து உலகம் முழுவதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. அதுகுறித்து பேசுவதற்கு அது ஆதரவையும் கோருகிறது. பல ஆண்டுகளில் இந்த கொண்டாட்டம், ஒரு சுகாதார கருப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கருதுகிறதோ அதைச்செய்கிறது.

மன ஆரோக்கியம், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலன், பருவநிலை மாற்றம் ஆகியவை கடந்த காலங்களில் கவனம் பெற்ற பிரச்னைகள் ஆகும். இந்த நாளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பல்வேறு செயல்திட்டங்கள் திட்டமிடப்படுகிறது. தகவல் பகிர்வு, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பல்வேறு சுகாதார பிரச்னைகள், கோளாறுகள் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து மக்களுக்கு கற்பிப்பது,

இந்தாண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள்

உலக சுகாதார தினத்தின் இந்தாண்டு கருப்பொருள், ‘எனது ஆரோக்கியம், எனது உரிமை’ என்பதாகும். அனைவருக்கும் தேவையான சுகாதார வசதிகள் கிடைப்பது, அவர்களுக்கு இருக்கும் சலுகை கிடையாது உரிமை என்பதை இந்த நாள் முன்னிறுத்துகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் அனைவருக்கும் சுகாதாரம் என்பது, குறைந்தபட்சம் 140 நாடுகள் சுகாதாரம் மனித உரிமை என்பதை அறிவுறுத்துகிறது. ஆனால் நாடுகள் இதை சட்டமாக்கவில்லை. அவர்கள் சுகாதார சேவைகளை பெறுவதற்கு பாத்தியப்பட்டவர்கள் என்று உறுதியளிக்கவில்லை.

இந்தாண்டின் கருப்பொருள், ஒவ்வொருவரின் உரிமையையும் நிலைநாட்ட வலியுறுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் எங்கும் தரமான சுகாதார சேவைகள், தகவல்கள், பாடங்கள் கிடைப்பதற்கு உறுதியளிக்கிறது. 

பாதுகாப்பான குடிநீர், சுத்தமான காற்று, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, தரமான வீடு, நல்ல வேலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாகுபாட்டில் இருந்து சுதந்திரம் கிடைக்கவேண்டும் என்று உலக சுகாதார மையம் வலியுறுத்துகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி